இது தெரியுமா ? காலையில் எழுந்ததும் அரை ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்
காலையில் தூங்கி எழுந்ததும் அரை ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரியும்.
வயதாக, வயதாக எலும்புகள் தேய்மானம் அடையும். எலும்பு மஜ்ஜைகளில் உள்ள ஈரத்தன்மை குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் 40 வயதுக்கு மேல் மூட்டுவலி வந்து பாடாய் படுத்துகிறது. ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தினமும் சிறிது நெய் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பிரச்சினையே இருக்காது. ஏனெனில் இயற்கையாகவே நெய் தசைகளுக்கிடையே ஒரு லூப்ரிகண்ட் போல செயல்படும் தன்மை கொண்டது. நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால் இது மூட்டு வலி, ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோராசிஸ் போன்ற எலும்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
சருமப் பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பாக, சருமம் அதிக வறட்சியுடன் இருப்பவர்கள் நெய்யை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் வீதம் நெய் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும செல்கள் புதுப்பிக்கப்படும். தோலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க நெய் மிகச்சிறந்த இயற்கைப் பொருளாக விளங்குகிறது. அதோடு நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்களும் புரதங்களும் சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதோடு சரும நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்வதில் நெய் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது.
வல்லாரை எப்படி ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டதோ அதேபோல, நெய்யும் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் எழுந்ததும் அரை ஸ்பூன் சுத்தமான பசு நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்து வாருங்கள். மிக விரைவிலேயே அவர்களுடைய ஞாபகத் திறன் மேம்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்.
நெய் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி, நரம்புகளைச் செயல்பட வைக்கும் வேலையைச் செய்கிறது. சிறுவயதிலேயே இப்படி நெய்யை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடப் பழகினால், வயதான பின்பு வரும் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற ஞாபகத் திறன் குறைபாடு, ஞாபக மறதி பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.