இது தெரியுமா ? இந்தியர்கள் விசா இல்லாமல் ஒன்றல்ல ரெண்டல்ல மொத்தம் 62 நாடுகளுக்கு செல்லலாம்..!
இந்தியா பொருளாதார அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. இதனால், இந்தியாவில் இருந்து இந்தியர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதுமானது. அதாவது, இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். தற்போது எந்தெந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பது குறித்த பட்டியலை காணலாம்.
அங்கோலா, பார்படாஸ், பூடான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள்புரூண்டிகம்போடியாகேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், கூக் தீவுகள், டிஜிபவுட்டி, டொமினிகா, எல் சால்வடார், எத்தியோப்பியா, பிஜி, கபோன், கிரீனடா, கினியா பிசாவு, ஹைதி, இந்தோனேஷியா, ஈரான், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிரிபாட்டி, லாவோஸ், மகாவோ, மடகாஸ்கர், மலேஷியா, மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், மொரிஷியானா, மொரிஷியஸ், மான்ட்செரட், மொசம்பிக், மியான்மர், நேபாளம், நையூ, ஓமன், பலாவு தீவுகள், கத்தார், ருவாண்டா, சமோவா, செனகல், சீசெல்ஸ், சியாரா லியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்செயின்ட்லூசியா, செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ், தான்சானியா, தாய்லாந்து, தைமூர், டோகோ, டிரினாட் மற்றும் டோபாகோ, துனிஷியா, துவாலு, வனுடு, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்.