இது தெரியுமா ? பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட இரவு நீரில் ஊற வைத்து…
மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடுகையில் பாதாம் அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. இந்த பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.
பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.
பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.
பாதாமில் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
பாதாம் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவும். ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.
தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை உட்கொண்டு வந்தால், அது வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கி, இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும்.
அன்றாடம் பாதாம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளின் மேல் நாட்டம் வருவது தவிர்க்கப்படும். ஆகவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் பாதாமை சாப்பிடுங்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது இந்த பாதாம். நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
தாய்பாலை அதிகரிக்க கூடியது இந்த பாதாம். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது பாதாம். தினமும் காலையில் நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிடும் பொழுது ரத்தத்தில் உள்ள ஆல்ஃபா அதிகரித்து இரத்த அழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்திருக்க உதவும்.
இதன் மூலமாக இரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வர உடலுக்கு மிகவும் நல்லது.