இது தெரியுமா ? தீராத விக்கல் வந்தால் 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும்
கொட்டாவியை நிறுத்த.கொட்டாவி வருவதற்கான காரணம்: ஆக்சிஜென் பற்றாக்குறை தான். அதனால்…ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்…
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.
ஒரு 30 வினாடிகள்.இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்… நின்று போகும் தீராத விக்கல்!
ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்.
உடல் துர் நாற்றத்தைப்போக்க… குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்… அவ்வளவு தான்… நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
.வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்… முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும் கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.