இது தெரியுமா ? தொடர்ந்து தேங்காய் பால் குடித்து வர…
நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.இத்தகைய அற்புத குணங்கள் நிறைந்துள்ள தேங்காய் பாலின் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
வயிற்றில் புண், வடு, வயிறு கோளாறு, செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தொடர்ந்து தேங்காய் பால் குடித்துவர பூரண குணமாகும்.
நீரிழிவு நோய் உடலில் எதனால் வருகிறது என்றால் உடலில் மாங்கனீசு என்கிற சத்து குறைபாட்டினால் வருகிறது. நமது உடலில் மாங்கனீசு சத்து அதிகரிக்க தேங்காய் பாலை குடித்து வரலாம். ஏனென்றால் தேங்காய் பாலில் அதிகமாக மாங்கனீசு சத்து நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.
சிலருக்கு இளம் வயதிலையே தோல் சுருக்கம் அடைந்து பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்க மாட்டார்கள். அதற்கு நீங்கள் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. சரும தோல்கள் சீக்கிரத்தில் சுருக்கம் கொடுக்காமல் இருப்பதற்கு அடிக்கடி தேங்காய் பால் குடித்து வரலாம். தேங்காய் பால் தோலில் உள்ள பளபளப்பு தன்மை அதிகரித்து வயதான காலத்திலும் இளமை தோற்றம் நீடிக்கும்.
உடலில் உள்ள எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு முதலில் பாஸ்பரஸ் என்ற ஊட்டச்சத்து மிகவும் தேவை. தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் சத்து இல்லாவிட்டாலும் பாஸ்பரஸ் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு முறிவுகளை தடுத்துவிடும்.
தேங்காய் எண்ணெய் பதம் அளிக்க உதவக் கூடியது. எனவே வறண்ட சருமம், வறண்ட தலைமுடி இருந்தால் அவர்கள் தொடர்ந்து தேங்காய் பால் குடிக்க முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அரிக்கும் வேர்கள், பொடுகுத் தொல்லையும் இருக்காது. அதேபோல் தேங்காய் பாலை கொண்டு மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் பால் சருமத்திற்கு எண்ணற்ற பலன்களை தரக்கூடியது. அதில் முகத்தில் பருக்களை அகற்றி தெளிவான சருமத்தை அளிக்கிறது. தேங்காய் பாலில் பஞ்சு ஊற வைத்து அதை முகத்தில் ஒத்தி எடுத்து காய வைத்துக் கழுவினாலும் சருமத்திற்கு நல்லது.
இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதோடு அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இன்சுலின் சுரப்பையும் சீராக கையாளும்.
தேங்காய் பாலில் செலினியம் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக உள்ளது. கீல்வாத பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் தேங்காய் பாலை குடித்து வர கீல்வாத நோய் விரைவில் குணமாகும்.
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் அழுக்குகளையும் அகற்றவும் மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும்.
தேங்காய் பாலில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன. அவை ஆரோக்கியமான சருமத்தையும், கூந்தலை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும்.
உடலில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
தேங்காய் பால் எளிதில் செரிக்கக் கூடியது.
தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
தேங்காய் பாலில் பொட்டாசியம் மிகவும் அதிகம்.தேங்காய் பாலில் இருக்கும் இரும்புச் சத்து இரத்த சோகையைப் போக்க உதவுகிறது.
தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.
புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.