இது தெரியுமா ? ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்து வந்தால்…
இதில் கொழுப்பு சத்து நிறைந்ததாக கருதப்படும்.
இந்தியாவில் மட்டன் இரு வகையாக சாப்பிடுகிறோம். ஒன்று செம்மறி ஆடு , மற்றொன்று வெள்ளாடு. பொதுவாக ஆங்கிலத்தில் மட்டன் என்ற வார்த்தை செம்மறி ஆட்டின் இறைச்சியை குறிக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிக மக்கள் வெள்ளாட்டு இறைச்சியை பயன்படுத்துகின்றனர். இதன் இரண்டின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, 100 கிராம் செம்மறி ஆட்டு கறியில் 136 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அதேசமயம் வெள்ளாட்டு கறியில் வெறும் 80 கிராம் அளவிற்கு மட்டுமே கொலஸ்ட்ரால் உள்ளது.நாட்டுக்கோழி அல்லது பிராய்லர் கோழி இரண்டையும் தோலுடன் சாப்பிடும் போது 100 கிராமில் 73 கிராம் அளவிற்கு கொலஸ்ட்ராலும், தோல் நீக்கிய 100 கிராம் கோழி இறைச்சியில் 55 கிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது.
ஆனால் மீனில் வெறும் 50 கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது.
ஒரு மனிதனின் உடலுக்கு தினந்தோறும் சராசரியாக 2000 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் தேவை என்பதால், தினமும் கால் கிலோ அளவிற்கு செம்மறி ஆட்டு கறி சாப்பிட்டாலும், அதிகபட்சம் 300 கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உடலுக்கு கிடைக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
அதேசமயம் எல்டிஎல் (கெட்ட கொழுப்பு) ஜீரணிக்க முடியாத அளவிற்கு என்சைம் குறைப்பாடு உள்ளவர்கள், ஆட்டிறைச்சி போன்ற நிறை கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது என பரிந்துரைத்துள்ளார்.