இது தெரியுமா ? என்றும் 16 வயது வாழ ஓர் நெல்லிக்கனி போதும்..!

உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும். இதை தடுக்க வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு (இரண்டு நெல்லிக்காய்) மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், சர்க்கரையை சேர்க்காமல் குடிக்கலாம். இதயக்கோளாறு, நரம்பு தளர்ச்சி, இளநரை இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வரலாம்.

கீல்வாதம், நரம்பு தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாக பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து குடிக்கலாம். நெல்லிக்கனியை உலர்த்தி பொடியாக்கி உடம்பில் தேய்த்துக் குளித்தால் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊற வைத்து கண்களை கழுவி வர, கண் நோய்கள் குணமாகும். வாய்ப்புண் குணமாக நெல்லி இலையை சிறிது எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்ப ளித்தால் போதும்.

நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து நரை முடி மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான நீரில் தொடர்ந்து குளித்து வர நரை முடி மறையும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி நன்கு ஊறியதும் குளித்தால் முடி நன்கு செழித்து வளரும். இதில் முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும். நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப்போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து குடிக்க சளி, தும்மல் நீங்கும்.

பாலில் நெல்லிப்பொடியை கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய் விட்டு கலக்கி குடித்து வர கக்குவான் இருமல் குணமாகும். நெல்லிச்சாறுடன் சந்தனம் அரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

நெல்லிச்சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும். நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது.

உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். நெல்லி வற்றலுடன் வில்வ இலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

1) மூட்டு வலியை போக்கும் “முடக்கத்தான் கீரை.”

2) இதயத்தை வலுப்படுத்த “செம்பருத்திப் பூ”.

3) என்றும் 16 வயது வாழ ஓர் “நெல்லிக்கனி.”

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “கற்பூரவல்லி”(ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் “அரைக்கீரை.”

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் “மணத்தக்காளிகீரை”.

7) உடலை பொன்னிறமாக மாற்றும் “பொன்னாங்கண்ணி கீரை.”

8) மாரடைப்பு நீங்கும் “மாதுளம் பழம்.”

9) ரத்தத்தை சுத்தமாகும் “அருகம்புல்.”

10) கான்சர் நோயை குணமாக்கும் “சீதா பழம்.”

11) மூளை வலிமைக்கு ஓர் “பப்பாளி பழம்.”

12) நீரிழிவு நோயை குணமாக்கும் “முள்ளங்கி.”

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட “வெந்தயக் கீரை.”

14) நீரிழிவு நோயை குணமாக்க ” வில்வம்.”

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “துளசி.”

16) மார்பு சளி நீங்கும் “சுண்டைக்காய்.”

17) சளி, ஆஸ்துமாவுக்கு “ஆடாதொடை.”

18) ஞாபகசக்தியை கொடுக்கும் “வல்லாரை கீரை.”

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “பசலைக்கீரை.”

20) ரத்த சோகையை நீக்கும் “பீட்ரூட்.”

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்”அன்னாசி பழம்.”

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் “தூதுவளை”

25) முகம் அழகுபெற “திராட்சை பழம்.”

26) அஜீரணத்தை போக்கும் “புதினா.”

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *