இது தெரியுமா ? உடல் எடைய குறைய விரும்புபவர்கள் குடம்புளியை எடுத்து நீரில்

உணவை விரைவில் செரிக்க வைக்கும் ஆற்றல் இந்த குடம் புளிக்கு உள்ளது உடல் எடையை குறைக்கும் மருந்துவகைகளின், மூல மருந்தாக பயன்படுகிறது.

இதில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம், இதயத்தை காக்கும் தன்மைமிக்கது. அதிகப்படியான பசி எண்ணத்தை குறைக்கும் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி, உடல் எடைக்குறைப்பில், முக்கிய பங்காற்றுகிறது. குடம் புளியை மூலப்பொருளாகக்கொண்ட, உடல் எடையைக் குறைக்கும் மேலை மருந்துகளில், இதன் தாவரவியல் பெயரிலேயே, விற்பனையாகிறது.

குடம் புளி எடுத்துகொள்வதன் மூலம் சில மாதங்களில் கூடுதல் எடையை குறைக்கலாம். குடம்புளி கலந்த தண்ணீர் தேவையற்ற பசியை அடக்க செய்கிறது.உடல் எடைய குறைய விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிடவும். பிறகு அதை இறக்கி குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வரவும். அதிக அளவு வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்ள வேண்டும்.

மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மையுள்ள சித்த மருந்துகளில், குடம் புளி பெருமளவில் பயனாகிறது. குடம் புளி, உடல் தசைகளை உறுதியாக்கி உடல் பொலிவை அதிகரிக்கும் ஆற்றல்கொண்டது.

இரத்தக் கொழுப்புகளை கரைத்து, சர்க்கரை குறைபாடுகளை சரிசெய்து, வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் உடல் நல மருந்தாகவும் பயன்படுகிறது. குடம் புளி மரப்பட்டைப் பிசின், மருத்துவத்துறையில் பயன்படுகிறது.குடம்புளி எடுத்துகொள்வதன் மூலம் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணம், அமிலத்தன்மை, இரைப்பை போன்ற பிரச்சனகள் கட்டுப்படுத்தப்படுகிறது. அஜீரணக்கோளாறு கொண்டிருப்பவர்கள் குடம்புளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பலன் கிடைக்கும்.

குடம் புளியின் பழச்சதையை அப்படியே, சமையலில், சாம்பார் செய்ய, இரசம் செய்யப்பயன்படுத்தலாம், புளி சேர்க்கும் அனைத்துவகை உணவுகளிலும் பயன்படுத்தலாம்.

குடம் புளி பழச்சதை கிடைக்காதபட்சத்தில் இல்லையென்றால், நாட்டு மருந்துக்கடைகளில் பதப்படுத்தப்பட்ட குடம் புளியை வாங்கிப் பயன்படுத்தலாம்.

எரிச்சலூட்டும் குடல் அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் தினமும் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அறிகுறிகள் கட்டுப்படும்.

குடம்புளியில் இருக்கும் கார்சினோல் ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டை கொண்டுள்ளதால் பக்கவாதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்து அதிகரிக்க இவை பயன்படுத்தலாம்.

முட்டுவலி மற்றும் கருப்பை நோய்கள் உள்ளவர்களுக்கு குடம்புளி பழத்தின் கஷாயத்துடன் சிகிச்சை அளிக்கபடுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும், புளிக்கு மாற்றாக, இந்த குடம் புளியை பயன்படுத்தினால் உணவுகளில் ஒரு தனி மணமும் சுவையும் கூடவே, சாப்பிட்ட உணவுகள் எல்லாம் விரைவில் செரிமானம் ஆகச்செய்யும் தன்மைமிக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *