இது தெரியுமா? முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து…

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதுதவிர, நார்ச் சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன.

அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும்.

முளைக் கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடியது. இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

மூளை வளர்ச்சி

முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலுள்ள மணிச்சத்து மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இக்கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.

காய்ச்சல், ஜுரம்

சீதோஷண மாற்றங்கள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சல், ஜுரங்கள் போன்றவை குணமாகும்.

மூலம்

மூலம் எனப்படும் ஆசனவாய் பகுதியில் ஏற்படும் புடைப்பு, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்புகளை உண்டாக்குகிறது. இந்த மூல வியாதியை நீக்க முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன் சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிடுவதால் உள் மூலம், பௌத்திரக் கட்டி மூலம், ரத்த மூலம் போன்ற பலவகையான மூல நோய்கள் குணமாகும்.

வயிற்று புண்கள்

காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அடிக்கடி உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் வயிறு மற்றும் குடல்களில் புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *