இது தெரியுமா ? மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், சர்க்கரை நோய் பாதிப்பு வருவதை தடுக்கலாம்..!

ஒமேகா 3 என்ற சத்துக்கள் வழக்கமாக மீன்களில் இருக்கிறது என்றாலும் அயிலா மீனில் அளவுக்கு அதிகமாகவே நிறைந்துள்ளது

ஒமேகா 3 உட்பட புரோட்டீன் அதிகம் உள்ள மீன்களில் அயிலை மீனும் ஒன்றாகும்.. இதனால் இதய நோய்கள் வராமல், இதயத்துக்கு பாதுகாவலனாகவும் திகழ்கிறது இந்த அயிலை மீன்.. ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும்போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். அதுமட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது.

இதில் வைட்டமின்கள் பி5 மற்றும் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம், நல்ல கொழுப்புகள், புரதச்சத்து என உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் இதில் உள்ளன.. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாக இந்த அயிலை கருதப்படுகிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வரும் வாய்ப்பு குறையும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

இப்படி சத்துக்கள் பலவிருந்தாலும்கூட, மீன் அலர்ஜி இருப்பவர்கள், இந்த அயிலை மீனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அயிலை மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், சர்க்கரை நோய் பாதிப்பு வருவதை தடுக்கலாம்.. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மற்ற உணவுகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் D சத்துக்கள் இந்த மீனில் உள்ளதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மீனை நிறையவே சாப்பிடலாம் என்கிறார்கள்.இந்த மீனை பிடித்த அன்றே சமைத்து சாப்பிட்டுவிட வேண்டும்.. பதப்படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

10 ருசியான மீன் வகைகள்
ருசியான மீன் வகைகள் (பெரிய மீன்) English Name
1. ஐ வாவல் மீன்/ வெள்ளை வவ்வால்- Grey pomfret
2. வஞ்சரம் மீன்/ அறுக்குளா Seer Fish/ king mackerel
3. கடவுறால் மீன்/ கடவுறா Cobia Fish
4. காலா மீன் / காளை மீன் Indian Salmon
5. குதிப்பு மீன் / சள்ளை மீன் False trevally
6. சீலா மீன் / ஊளி மீன் Barracuda
7. பாறை மீன் Trevally fish
8. கொடுவா மீன் Barramundi/Indian Sea Bass
9. விலை மீன் Emperor Fish
10.a. முரல் மீன் Needle fish
10.b. வாளை மீன் Ribbon Fish
ருசியான மீன் வகைகள் (சிறிய மீன்) English Name
1. நகரை மீன்/ நகர Red mullet
2. காராபொடி/காரப்பொடி Common Ponyfish
3.a. சீனிக்கொந்தன் / தேசப்பொடி White Anchovy
3.b தொன்டன் Rainbow sardine
4. நெத்திலி மீன் Anchovy
5. சாலை மத்தி Sardine
6. சூபாறை / சுவாபாரை Yellow Striped Trevally
7. சூடை/ மத்தி சூடை Indian Sardine
8. பேச்சாலை மீன் / இந்திய எண்ணெய் மத்தி Indian oil sardine
9. கோலா மீன் / குத்தா Garfis
10. கீளி மீன் Yellow Bass
ருசியான மீன் வகைகள் (நடுத்தர மீன்) English Name
1. கிழங்கான் Lady Fish
2. மண்டக்காரா மீன் Pony Fish
3.a. உருட்டு நகர மீன் Red Mullet
3. b. ஊளி மீன் Barracuda Fish
4. சங்கரரா மீன் Red Snapper Fish
5. ஊடகம் மீன் Silver Biddy Fish
6. பொன்னாம் பாறை மீன் Travelly Fish
7. பண்ணா மீன் Silver Croaker Fish
8. குமுலா (அயிலா) Mackeral Fish
9. செங்கனி மீன் Sengani Fish
10. சுண்டுபடி மீன் Grey Mullet Fish
Tastiest Sea Foods in Tamilnadu (Overall)
மணி சிங்கி – Reef Lobster
தாளஞ்சிங்கி – Rock / Spiny Lobster
களி நண்டு/ சம்பா நண்டு – Mud Crab
கிளி சிங்கி – Rainbow Lobster – rare
இறால் – Tiger Prawns
நீலக்கால் நண்டு/ ஓலைக்கால் நண்டு – Blue Swimmer Crab
கனவா /கடம்பா – Indian Ocean Squid / Common Squid
சங்கு கறி – Conch Snail
9.a. கண் நண்டு /பொட்டு நண்டு – 3 Spot Crab
9.b. கூனி – Baby Red Shrimp
சிகப்பு /பார நண்டு -Red Crab

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *