இது தெரியுமா ? சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்…

ஞ்சி ஒரு நல்ல ஆற்றல் வழங்கும் மூலமாகும். அரிசியை வேகவைத்த இந்த நீரில் கார்போஹைட்ரேட் நிரம்பியுள்ளது.

மேலும் இது சாதம் செரிக்கும் அளவிற்கு கடினமானது அல்ல. குடித்ததும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டை உடல் எளிதாக உறிஞ்சும். தினமும் காலையில் வெளியில் செல்லும் முன் ஒரு டம்ளர் அரிசி தண்ணீர் குடிப்பது அன்றைய நாளுக்கு போதுமான ஆற்றலைத் தரும்.

கஞ்சி குடிப்பது நீரிழப்பைத் தடுக்கிறது. கோடை மாதங்களில், பலவீனத்தைத் தவிர்க்க ஒருவர் நீரேற்றமாக இருக்க வேண்டும். வெப்பத்தில் வெளியே செல்லும் முன் ஒருவர் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கஞ்சி உடலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், உப்புகள் மற்றும் நீர் இருப்பதால், வெப்பத்திற்கு எதிராக வலிமை மற்றும் மீள்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது சீரான குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. அரிசியில் உள்ள மாவுச்சத்து, வயிற்றில் உள்ள பயனுள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

* சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

* கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

* அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

* கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

* சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

* பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

* சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

* பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு
மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *