இது தெரியுமா ? இரவில் தூங்கவிடாமல் செய்யும் மூக்கடைப்பை போக்க எளிய வழி..!
சிலருக்கு இரவில் படுக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். அப்படி நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வைத்திய முறையகளானது நம் பாட்டிமார்களிடம் இருந்து சுட்டது. அதைப் படித்து இரவில் பின்பற்றி, இரவில் ஏற்படும் மூக்கடைப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
பட்டை சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.
ரோஜாப்பூ மூக்கடைப்பு இருக்கும் போது, ரோஜாப்பூவின் வாசத்தை முகர்ந்து வர, உடனே மூக்கடைப்பு போய்விடும்.
ஆகாயத்தாமரை ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
நொச்சி இலை நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
மாவிலை மாவிலைகளை காய வைத்து பொடி செய்து, நெருப்பில் போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.
அகத்திக்கீரை அகத்திக்கீரையை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றில் தேன் கலந்து குடித்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
சுக்கு சுக்கை ஒரு கப் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பால் ஊற்றி கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால், மூக்கடைப்பு வருவது தடுக்கப்படும்.
யூகலிப்டஸ் ஆயில் ஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு உடனே விலகும்.
வெங்காயம் வெங்காயத்தை தோலுரித்து வெட்டி, அதனை 4-5 நிமிடம் முகர்ந்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபடலாம்.