இது தெரியுமா ? இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்..!

நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது. ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

கோதுமை, பார்லி, கம்பு ஆகிய தானியத்தில் குளூடின் என்ற புரதம் இருக்கும். இது செலியாக் என்ற நோய் பாதித்தவர்களின் உடலுக்கு தீமை செய்யும். ஆனால் சோளம் அப்படியில்லை. இதில் பசையம் போன்ற குளூடின் இல்லை. கோதுமைக்கு பதில் சோளத்தை சாப்பிட்டால் வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், உடல் சோர்வு, தலைவலி கூட குறையும். சோளத்தை உண்பது நம்முடைய செரிமான மண்டலத்திற்கு ஆரோக்கியமான பலன்களை தரும்.

குறைந்தளவு கிளைசாமிக் குறியீடு உள்ளதால் சோளம் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து அதிகளவில் கிடைக்கிறது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியமாக வைக்கிறது.

நார்ச்சத்து மிகுந்து காணப்படும் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் குடல் இயக்கம் மேம்படும். இதனால் தீராத மலச்சிக்கல் பிரச்சனை கூட தீர்க்கப்படுகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்க சோளம் உதவுகிறது. இதய நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க சோளம் உண்ணுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தங்களுடைய உணவில் சோளத்தை சேர்க்கலாம்.

கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *