இது தெரியுமா ? வாய் துர்நாற்றத்துக்கு உகந்த வீட்டு வைத்தியம் இது தான்.!

வால் மிளகு சமையலில் கூட அரிதாகவோ அல்லது ஒரு போதும் கூட பயன்படுத்துவதில்லை. ஆனால் வால் மிளகு யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு மிளகுடன் ஒத்திருக்கும் ஒது உலர்ந்த பழுக்காத பழம். நாக்கில் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். இது பாரம்பரிய மருந்துகள் பலவற்றிலும், கோனோரியா, வயிற்றுப்போக்கு, சிபிலிஸ், வயிற்று வலி, குடல் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மெல்லிய தண்டுகள் அல்லது வால் நீண்டிருக்கும். அதனால் தான் இது வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது.

வாய் துர்நாற்றத்துக்கு உகந்த வீட்டு வைத்தியம் இது. வாய் துர்நாற்றம் இருக்கும் போது 1 கப் தண்ணீரில் சிறிய இலவங்கப்பட்டை 1 எடுத்து அதனுடன் கால் டீஸ்பூன் அரைத்த வால் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்கவும்.

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் வால்மிளகு ரசம் வைத்துச் சாப்பிடலாம்.

வால் மிளகு காரத்தன்மை உடையது இதை சாப்பிடும் பொழுது சிறுநீரை பெருக்கும், வாயு பிரச்சினை சரிசெய்யும், கோழையை அகற்றும் இது போன்ற பிரச்சினைகள் சரி செய்யும்.

சளி, இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைக்கும் இந்த வால் மிளகு உதவும். ஜலதோஷம், இருமலின் போது இலேசான காய்ச்சலின் போதும் வால் மிளகு சிறப்பாக உதவும். ஏப்பத்துக்கும் செரிமானத்துக்கும் கூட இவை உதவும்.

உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தன்மை வால் மிளகு உண்டு. வால் மிளகை பொடி செய்து இளநீரில் கலந்து குடித்தால் வயிற்றில் ஏற்படும் சூடு பிரச்சினை சரிசெய்யும்.

வால் மிளகை தூள் செய்து சீரகம் சேர்த்து மோருடன் கலந்து குடிக்க வேண்டும். கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தன்மை வால் மிளகு உண்டு.

வால் மிளகு தொண்டை அழற்சிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. தொண்டை வலி, தொண்டை புண் இருக்கும் போது தேநீராக்கி குடிக்கலாம்.

தொண்டைக் கரகரப்பு உள்ளவர்கள், வால் மிளகை நெய் விட்டு வறுத்து, அரைத்துப் பொடித்துவைத்து, அரை தேக்கரண்டி வால் மிளகுப் பொடியை எடுத்துத் தேனில் குழைத்து, நன்றாகத் தொண்டையில் படுமாறு வைத்துச் சாப்பிட வேண்டும். இதன் மூலம், தொண்டையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கும்.

வாயுப் பிரச்னை உள்ளவர்கள், அல்சர் கோளாறு உள்ளவர்கள் வால் மிளகைக் குறைவாகப் பயன்படுத்துவதே நல்லது.

வால் மிளகு அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உச்சந்தலை பொடுகை திறம்பட தடுக்க கூடியது. கூந்தலுக்கான எண்ணெய் தயாரிப்பில் இவை சிறு அளவில் சேர்க்கப்படுகிறது. கல்லீரலை பதம் பார்க்கும் வைரஸ்களை கட்டுப்பாட்டில் வைக்கும் திறனும் இதற்கு உண்டு.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *