இது தெரியுமா ? இந்த கீரை ஆண்களுக்கு வரப்பிரசாதம்… சர்க்கரை நோயாளிகளுக்கு “தோழன்”..!

ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் அது நமது கைகளில் தான் உள்ளது. அதாவது நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க சத்துக்கள் நிறைந்த உணவுமுறைகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் கீரைவகைகளை நம் உணவுகளில் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல்நலத்தை பாதுகாக்கலாம்.இன்று நாம் பார்க்க போகும் கீரை சிறுகீரை.

சிறுகீரையில் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து போன்றவை மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. நீர்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, ஆகியவையும் இந்த சிறுகீரையில் நிறைந்துள்ளது. இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.உடற்பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற கீரை சிறுகீரை ஆகும்.

இந்த சிறுகீரையின் தண்டுகள் நீளமாக இருக்கும்.. ஆனால், இந்த கீரையின் தண்டு, இலை இரண்டுமே மருத்துவ பலன்களை கொண்டிருக்கின்றன.. நார்ச்சத்து நிரம்பிய கீரைகளில் இந்த சிறுகீரையை தவிர்க்க முடியாது.. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானம் எளிதாகி, வயிற்றை சுத்தப்படுத்துகிறது.. மலச்சிக்கலையும் தீர்க்கிறது..

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது வயது கூடிக்கொண்டு செல்லும் பொது, குறைந்து கொண்டே வரும். எனவே சிறுகீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம். இந்த சிறுகீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களால் உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கிறது.

இதிலுள்ள வைட்டமின் ஏ – நம்முடைய கண்களுக்கு நலனை அள்ளித்தருகிறது.. கீரையிலுள்ள கால்சியம் சத்துக்கள், எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிப்பாட்டுக்கும் உதவுகிறது.. உள்ளுறுப்புகளை வலுப்படுத்துவதில் இந்த சிறுகீரைக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு அதிக ஆற்றலையும், சக்தியையும் தருவது இந்த சிறுகீரை.

இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன. சிறுகீரை ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

பொதுவாக உடலில் இரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். சிறுகீரையை வாரம் ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

உடம்பில் ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை இந்த சிறுகீரைக்கு உண்டு. அத்துடன், காயங்களில் தொற்றுக்களை ஏற்படாமலும், தடுக்க உதவு புரிகிறது. அதனால்தான், சிறுகீரையுடன் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு, காயங்கள் உள்ள இடங்களில் தடவுவார்கள். இதனால், புண்கள் விரைவில் ஆறும். அதேபோல, சிறுகீரை + மஞ்சள் + முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து, முகப்பருக்கள் மீது பூசினால், பருக்கள் மறையும்..சிறுகீரையின் வேர்கூட மருத்துவ குணம் நிறைந்தது.. வழக்கமாக சிறுகீரையை அதிகம் சேர்த்து கொண்டால், சிறுநீர் நன்றாக பிரியும்.. இதற்கு சிறுகீரையின் வேர்கூட பயன்படுத்தலாம்.. சிறுகீரையுடன், அதன் வேர்களையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு, மிளகுத்தூள், உப்பு, நெய் சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். இவற்றிலிருந்து, 5-10 கிராம் அளவுக்கு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், நினைவுத்திறன் பெருகுமாம்.

எச்சரிக்கை:-

இரவில் கீரை சாப்பிடவே கூடாது. ஏனென்றால், கீரைகளில், நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. ஏனென்றால், இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்களையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *