இது தெரியுமா ? உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீன் சாப்பிடலாம்..!

அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து மீன்களிலுமே உள்ளன.அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து மீன்களிலுமே உள்ளன.

சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். இந்த ஒமிகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது… அத்துடன், இதயத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது.இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற நம் உடலுக்கு தேவையான் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. அதனால், அனைத்து வயதினருமே மீன் வகைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

தினமும் மீன் சாப்பிடுவதனால் ரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளும் சரியாகிறது.. முக்கியமாக, கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம்.. இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் குறையும்.. அதிலும், மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், இதய ஆரோக்கியத்திற்கு மீன்கள் நன்மை பயக்கின்றன.. முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவில் மீன்களும் ஒன்று.. அடிக்கடி மீன் சாப்பிடுவதால், இயற்கையான மன அழுத்த எதிர்ப்பு, மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களை எளிதாக தடுக்கலாம்.

சால்மன் மீனில் ஒமேகா-3 அதிகம் நிறைந்துள்ளது. வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை, கண்கள் மற்றும் செரிமான மண்டலத்தின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால், எந்த மீனை சமைத்தாலும், நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். அரைவேக்காடு மீன்களையும் சாப்பிடக்கூடாது..கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது.. குறிப்பாக, மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம், வவ்வால் மீன், கோலா மீன், காரப்பொடி மீன் இப்படியான மீன்கள் ஓமேகா 3 சத்துகள் கொண்டவை என்பதால், இவற்றை அளவோடு சாப்பிடலாம்.

ரோகு
இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்த மீன் அதிகம் கிடைக்கும். இதில் ஏராளமான புரோடீன் மற்றும் ஒமேகா 3 ரக கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அனைத்து இந்தியர்களும் வாங்க கூடிய விலையில் இந்த மீன் கிடைக்கிறது. இதில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

கட்லா
இது சுத்தமான நீரில் கிடைக்கும் மீன் எனலாம். முழுமையான வளர்ந்த நிலையில், இந்த மீன் அதிகபட்சம் 2 கிலோ வரை எடை கொண்டிருக்கும். இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.

சால்மன்

இது விலை உயர்ந்த மீன் என்பதோடு, இதன் சுவையும் தூக்கலாக இருக்கும். இந்த மீனில் அதிகப்படியான அமினோ ஆசிட் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது.

அயல
தென் பகுதி மற்றும் மத்திய இந்தியாவில் அதிகம் கிடைக்கும் மீன் இது. இதில் ஏராளமான ஒமேகா 3, வைட்டமின் டி மற்றும் செலனியம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம் என பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும்.

சங்கரா
இந்த மீனில் ஏராளமான புரோடீன் மற்றும் மிக குறைந்த அளவு மெர்குரி உள்ளது. இது அதிகளவு புரோடீன் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த மீன் ஆகும். மேலும் இது உடல் எடை குறைப்பு மற்றும் தசைகளை வலுவாக்க சிறந்தது. இந்த மீனும் அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கிறது.

வஞ்சிரம்
ஏராளமான புரோடீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த மீன் இது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்ப்பது நல்லது.

வவ்வால்
இது நாடு முழுக்க பிரபலமான மீன் ஆகும். இதில் குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. அதிக சுவை மட்டுமின்றி ஏராளமான அளவில் ஒமேகா 2 ஆசிட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.

மத்தி
அதிகப்படியான டிஹெச்ஏ நிறைந்த மீன் இது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஞாபக சக்தியை தூண்டும். மேலும் மூளை வளர்ச்சிக்கும் இந்த மீன் சிறந்தது. இதில் ஏராளமான புரோடீன், வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அழுத்தத்தை போக்குகிறது.

கெளுத்தி
குறைந்த அளவு கலோரி அதிக புரோடீன் நிறைந்த மீன் இது. தவிர ஏராளமான நியூட்ரியன்ட்கள், வைட்டமின் பி12, செலினியம், ஒமேகா 3, ஒமேகா 6 பேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீன் சாப்பிடலாம். இது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய கோளாறு ஏர்படுவதை தடுக்கும் திறன் கொண்டுள்ளது. எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கருவுற்றவர்கள் இந்த மீன் சாப்பிட கூடாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *