இது தெரியுமா ? தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் பாலில்.

டலுக்கு பலத்தை தருவதாகவும் பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது அன்னாசிப்பழம்.

தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

 

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

அன்னாசிப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதிகப்படியான அளவில் அன்னாசிப் பழங்களை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அன்னாசிப் பழத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளன. எனவே, சிலருக்கு இதை அதிகமாக சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். பெரும்பாலான பழங்களில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க முடியும். அந்த வகையில், அரை கப் அன்னாசிப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் 15 கிராம் ஆகும். எனவே, இதன் அளவில் மிக கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.

3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் எடை குறையும்.

4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.

5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.

6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும்.

7. காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *