இது தெரியுமா ? வயிறு இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்க…

சாம்பாருக்கும், கூட்டுக்கும் தாய்மார்களின் விருப்பமான ஒரு காயாகத் திகழும் சௌ சௌ, தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை மலைகள் மற்றும் மலை அடிவாரங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.இது தெற்கு மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட காய்கறியாகும். இது சயோட் ஸ்குவாஷ், மிர்லிட்டன், சோக்கோ எனவும் அழைக்கப்படுகிறது.

செள செள அதிகமாக நீர் உள்ளடக்கம் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட ஒரு காய்கறியாகும். இது இந்தியாவில் பரவலாக சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மென்மையான அமைப்பையும் தனித்துவமான சுவையையும் கொண்ட காய்கறியாகும். மேலும் சாலடுகள் மற்றும் குழம்புகளில் இதை சேர்க்கலாம். சிலர் இதை பச்சையாக உட்கொள்வதும் உண்டு. இதில் குறைவான அளவில் கலோரிகள் இருப்பதால் வழக்கமான உணவை விடவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இரத்த அழுத்த பாதிப்புகள், வயிறு தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது. கருவுற்ற மகளிருக்கு சிறந்த ஊட்டத்தை அளிக்கும் காயாக, சௌ சௌ திகழ்கிறது.

செள செளவில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது சிறுநீரகங்களில் உள்ள கூடுதல் திரவங்களை அகற்றி அதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே உணவில் செள செளவை கூட்டாகவோ அல்லது குழம்பிலோ சேர்த்து நீங்கள் உண்ணலாம்.

உடல் தளர்ச்சிகளை போக்கி, தசைகளை வலுவாக்கி, நரம்பு தளர்ச்சி பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்ந்து, வயிற்று நச்சுக்களை நீக்கி, உடலை சரியாக்கும் தன்மை கொண்டவை. மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட வைத்து, குடல் பாதிப்புகளை சரியாக்குகிறது, சௌ சௌ.

கருவுற்ற காலத்தில் சில பெண்களுக்கு, கை கால்களில் நீர் கோர்த்தது போன்ற வீக்கங்கள் ஏற்படும். இந்த வீக்கங்களை சரி செய்ய, சௌ சௌவை அடிக்கடி உணவில் சேர்த்து வர, வீக்கங்கள் வடிந்து விடும். மேலும், கருவில் உள்ள மகவையும், வியாதிகளின் தொற்றுக்களில் இருந்து காக்கக் கூடியது, சௌ சௌ.

சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப் படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும். குழந்தைகள் உணவில் சௌ சௌவை சேர்த்து வர, குழந்தைகள் ஊட்டமும், உடல் நலமும் பெறுவர்.

சௌ சௌவில் உள்ள ஆற்றல் மிக்க வைட்டமின் வேதிப் பொருட்கள், புற்று வியாதிகளை ஏற்படுத்தும் கிருமிகளை, உடலினுள் நுழைய விடாமல் தடுப்பதில், ஆற்றல் மிக்கவையாகத் திகழ்கின்றன. அனைத்து வயதினரும் சௌ சௌ காய்களை, உணவில் அவ்வப்போது சேர்த்து வர, கடுமையான வியாதிகள், உடலை அணுக விடாமல் தடுக்கலாம்.

குறிப்பாக, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.. மேலும் மிகமிக குறைந்த கலோரிகளும், மிக மிக அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது. டயட் இருப்பவர்களுக்கு இந்த 2 பண்பும்தானே ரொம்ப முக்கியமாக தேவைப்படுகிறது. அதனால், வெயிட் லாஸுக்கு, சௌசௌ சாப்பிடுவதை முயற்சி செய்து பார்க்கலாம்.சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம். இந்த சௌசௌவில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சமைத்தவுடன் மிகவும் மென்மையாக சுவையாக மாறுகிறது. இதன் தோல் பகுதி மற்றும் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு இதனை சமைக்கலாம்.

அதுமட்டுமல்ல, சௌசௌவில் நீர்ச்சத்து அதிகம் என்பதால், வேகவைக்கப்பட்ட உடனேயே மென்மையாக சுவையாக மாறிவிவிடுகிறது.. இந்த சௌசௌவில் கூட்டு, பொரியல், சட்னி, துவையல், குழம்பு இப்படி நிறைய செய்வார்கள்.. ஆனால், தோல், மற்றும் அதன் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். சமைத்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். சிலர் இதனை சாலட்களில் பயன்படுத்துவார்கள்.. சிலர் இதனை ஜூஸில் கூட சேர்த்துக்கொள்வார்கள். சிலர் இதில் பஜ்ஜி செய்வார்கள்.. சிலர் இந்த காயை வைத்து மோர்குழம்பு செய்வார்கள். அல்லது நிறைய தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சீரகம், மிளகு தாளித்து கஞ்சி போல் செய்தும் குடிக்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *