இது தெரியுமா ? வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால்…
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடிய மீன் இது. புரதமும், அதிகப்படியான கொழுப்பும், நாம் சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை பசி உணர்வை தூண்டாது.. இதனால், எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும்.
முன்பெல்லாம் இந்த மீன் அவ்வளவு பிரபலமாக இல்லை. அப்போது மிகவும் விலைக் குறைவில் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த மத்தி மீன் மக்களிடையே பிரபலமாக உள்ளது. நிறைய பேர் இந்த மீனை அலைந்து திரிந்து வாங்கி சாப்பிட நினைக்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற மீன்களை விட மத்தி மீனில் ஏராளமான சத்துக்கள் இருப்பது தான்.
மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.
மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
மத்தி மீனை உண்பதால் கண், இதயம், நீரிழிவு, எலும்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்மை அடையும்.