இது தெரியுமா ? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டும் போது…

சைக்கிள் ஓட்டுவதினால் என்னென்ன பயன்கள் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சில குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் சோம்பேறித்தனமாக காணப்படுவார்கள். இதற்கு காரணம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமாக இல்லாததுதான். நல்ல உடற்பயிற்சியை எடுப்பதன் மூலம் குழந்தைகளின் மூளை நன்றாக வேலை செய்யும். அந்த உடற்பயிற்சியானது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டும் போது நம் பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. இதனால் மூளை வேகமாக இயங்கி குழந்தைகள் தங்களது செயல்பாட்டில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள்.

நீண்ட ஆயுளுடன் வாழலாம் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் எல்லாம் சராசரியாக 80 வயதிற்கு மேல் ஆரோக்கியமான ஆயுளை பெற்றிருந்தார்கள். தற்போதெல்லாம் 70 ஆண்டுகள் வாழ்வதற்கே அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு காரணம் நாம் சைக்கிளை மறந்துவிட்டு மோட்டார் சைக்கிள், கார், பஸ்களில் செல்வதும் ஒரு காரணம் என்று பிரான்சில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்மறை ஆற்றல் நீங்கும் பொதுவாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். மன மகிழ்ச்சியின் காரணமாக அவர்கள் புத்துணர்ச்சி அடைகின்றனர். புத்துணர்ச்சியின் மூலம் நம் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள், மனதை தெளிவுபடுத்தி எதிர்மறை எண்ணங்கள் வரவிடாமல் தடுத்து, நம் வாழ்க்கையை பாசிட்டிவ் எனர்ஜி என்று சொல்லப்படும் நேர்மறை எண்ணத்தோடு வழிநடத்திச் செல்லும்.

18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் தினமும் தவறாமல் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டலாம். ஒருவேளை உடல் ஃபிட்டாக இருக்கவே சைக்கிளிங் தேர்வு செய்துள்ளீர்கள் என்றால், நீங்கள் தினமும் சைக்கிள் மிதிக்க வேண்டாம். கீழ்காணும் மூன்று முறைகளில் ஏதுனும் ஒரு சைக்கிளிங் முறையை வாரம் ஒரு முறை தேர்வு செய்யலாம்.

முதலில் பார்த்த முறை சாதாரண நிலப்பரப்பில் என்றால் இந்த முறை சைக்கிளிங் மலைப்பாங்கான பகுதிகளில் செல்வது. மலைப்பாங்கான நிலப்பரப்பில் சைக்கிள் ஓட்டுவது கடினமாக இருக்கும் என்பதால் மெதுவாக செல்ல வேண்டும். முதலில் 10 நிமிடங்கள் மெதுவாகவும் பின் 5 நிமிடங்கள் வேகமாகவும், பின் மீண்டும் மெதுவாக என 2 நிமிடங்கள் இடைவெளி விட்டு மாற்றி மாற்றி ஓட்ட வேண்டும். இதன்போது ஆழமாக சுவாசிக்க வேண்டும். இந்த முறையில் குறைந்தது 15 – 20 நிமிடங்கள் வேகமாக சைக்கிளிங் செய்ய முயற்சிக்கலாம். இத்தகைய சவாரிகள் உங்கள் தசை செயல்திறனை மேம்படுத்த உதவும்.

30 – 60 நிமிடங்கள் இந்த முறையில் சைக்கிள் ஓட்டலாம். உங்களால முடிந்த அளவு வேகமாக சைக்கிள் ஓட்டுவது உடலிலுள்ள அதிக கலோரிகளை எரிக்க உதவும் மற்றும் இதனை செய்தால் இதயத்திற்கும் நல்லது. இந்த முறையில் சைக்கிளிங் செய்ய முதலில் ஒரு 10 நிமிடங்கள் நன்கு வார்ம்-அப் செய்வது முக்கியம். சைக்கிளிங் செய்ய துவங்கியதுமே வேகமெடுத்து விடுங்கள். 5 நிமிடங்கள் வேகமாக ஓட்டிய பின் 30 வினாடிகள் ஆசுவாசப்படுத்தி கொண்டு பின் மீண்டும் 5 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுங்கள். 30 அல்லது 60 நிமிடங்கள் என நீங்கள் எவ்வளவு நேரம் தேர்வு செய்கிறீர்களாளோ அவ்வளவு நேரமும் இதே முறையில் சைக்கிளிங் செய்ய வேண்டும்.

வார இறுதியில் அல்லது உங்களது ஓய்வு நாளில் சுமார் 1 மணி நேரம் அல்லது அதற்கு மேல் நீங்கள் சைக்கிளிங் செல்வது, பொதுவாக உங்கள் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவும். நீண்ட நேரம் என்பதால் மெதுவான வேகத்தில் சைக்கிள் ஒட்டி செல்ல வேண்டும். இதனால் உங்கள் சுவாசம் ஆழமாகவும், வழக்கமாகவும் இருக்கும். இந்த முறைக்கு தட்டையான நிலப்பரப்பில் சைக்கிள் ஒட்டுவது நல்லது. இடையிடையே சில நிமிடங்கள் இடைவெளி எடுத்து கொண்டு தண்ணீர் குடிக்கலாம் அல்லது உடல் ஆற்றலுக்கு தேவையானதை சாப்பிடலாம். இந்த செயல்முறை உடலின் கலோரிகளை எரிக்க பயிற்சி அளிக்கும் மற்றும் நல்ல உடல் வடிவை பராமரிக்க உதவும்.

புற்றுநோயை தடுக்கிறது அமெரிக்காவில் நடந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடுத்தர வயது கொண்டவர்களுக்கு குடல் சார்ந்த புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்பட்டது.

நம் உடலின் எடையை சீராக பராமரிக்க சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி ஆகும். நம் உடலின் எடை அதிகமாக்கபடும் போது தான் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்ளும் ஏற்படுகிறது. கொழுப்பு குறையும் நம் உடம்பில் எடை ஏறுவதற்கு நாம் உண்ணும் உணவு பொருட்களில் உள்ள கொழுப்புச்சத்து ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் நம் உடம்பில் சேரும் இந்த கொழுப்பினை சைக்கிள் ஓட்டுவதன் மூலம் குறைத்துவிடலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொழுப்பு சத்துள்ள பொருட்களை உண்ணாமல் இருந்தால் கூட கொழுப்புச் சத்தானது அவர்களுக்கு அதிகரித்திருக்கும். இதனை உடற்பயிற்சி செய்வதன் மூலம் குறைத்துவிடலாம் என்கிறது மருத்துவம். அதிக வியர்வை வெளியேறுவதன் மூலமாகவும் கொழுப்புச்சத்து குறையும். அழகான தோற்றம் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடம்பில், கால் தசைகள், தொடைப்பகுதியில் உள்ள தசைகள், எலும்புகள், முதுகு தண்டுவடம், இடுப்புப்பகுதி தொப்பை பகுதி போன்றவை வலிமை பெற்று கட்டுக்கோப்பாக காட்சி அளிப்பதன் மூலம் அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தை பெறலாம். இதயத்திற்கு நல்லது சைக்கிள் ஓட்டுவதால் நம் இதயமும் ஆரோக்கியமாக இருக்கிறது.

உடற்பயிற்சியில் மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் 1500 பேரை வைத்து சோதனை செய்துள்ளனர். இதில் 31 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு சைக்கிள் ஓட்டுவதன் மூலம் குறைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வெளிநாட்டில் உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் கூட சைக்கிளை ஓட்ட மருத்துவர்கள் ஆலோசனை அளிக்கின்றார்கள். இனிவரும் காலத்தில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்கு செல்பவர்களும் சைக்கிளை பயன்படுத்தி வரலாம். சைக்கிளை ஓட்டும்போது கையுறை, ஹெல்மெட், காலணி, அணிந்து கொள்வது அவசியம். நமக்கு அடுத்து வரும் தலைமுறையாவது உடல் நலத்தை பேணிக் காக்கவும், நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், இந்த சைக்கிளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

நீரிழிவு நோய்க்கு சைக்கிள் ஓட்டுதல் எவ்வாறு உதவுகிறது?

*சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு அற்புதமான விளையாட்டாகும்.
*இது தசைகளை வேகமாக மீட்டெடுக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
*பெரிய உடல் உபாதைகள் ஏற்படும் என்ற அச்சமின்றி நீண்ட நேரம் இதனை செய்யலாம்.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது.
*ஏனெனில் இது கீழ் மூட்டுகளில் தசை வெகுஜனத்தின் 70 சதவீதத்தை செயல்படுத்துகிறது.
*யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும், சைக்கிள் ஓட்டலாம். மக்கள் தங்கள் 50, 60 மற்றும் 70 களில் கூட சைக்கிள் ஓட்ட முடியும். இது ஒரு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாகும்.
*அதிக எடை அல்லது பருமனான நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பொருத்தமான உடற்பயிற்சியாகும்.
*டைப் 2 நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணம் இன்சுலின் எதிர்ப்பு. நல்ல செய்தி என்னவென்றால், லேசான சைக்கிள் ஓட்டுதல் கூட முதல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் ட்ரைகிளிசரைடுகளை எரிக்கிறது.
*இது குளுக்கோஸ் கேரியர்களை செயல்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
*ஒரு மணிநேரம் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டினால், அதிக எடை கொண்ட நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அடுத்த 24 மணி நேரத்தில் பாதியாகக் குறையும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.
*அரை மணி நேரம் கூட வேகமாக சைக்கிள் ஓட்டினால், 19 சதவீதம் பேருக்கு ஒரு நாள் முழுவதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
*ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் போதும், சர்க்கரை நோயாளிகள் பயன் பெறுவார்கள்.
*நீங்கள் எவ்வளவு அதிகமாக மிதிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் நீரிழிவு நோயைத் தடுக்கிறீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *