ராஜகிரகம் சூரியனின் சிறப்புகள் என்ன தெரியுமா?

வகிரகங்களில் முதன்மையானவராகவும். ராஜகிரகம் எனவும் அழைக்கப்படுபவர் சூரிய பகவான். ஆதிகாலத்தில் உலக மக்கள் வழிபட்ட முதன்மை கடவுளாகவும் இருந்தவர் சூரியனே.

சூரியனை வழிபடுவதை, ‘சௌரம்’ என்று குறிப்பிடுகிறார்கள். சூரிய பகவானை பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்.

சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் உலகம் முழுவதும் வலம் வருவதாக ஐதீகம். அந்த ஏழு குதிரைகளின் பெயர்கள் காயத்ரி, பிரகதி, உஷ்னிக், ஜெகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்பதாகும். தை மாதம் சூரியனின் தேர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணப்படும். அன்றைய நாளுக்கு ‘ரத சப்தமி’ என்று பெயர். அன்றைய தினம் சூரியனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள்.

ஒவ்வொரு கடவுளையும் வழிபடும் விதமாக அவர்கள் சிறப்பு பற்றிய ஸ்லோகங்கள் உண்டு. அந்த வகையில் சூரிய பகவானை பற்றி எழுதப்பட்டுள்ள நூல் ‘ஆதித்ய ஹிருதயம்’ ஆகும். இந்த நூலை பாராயணம் செய்வதன் மூலம் நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். நம்மை சூழும் தீய சக்திகள் விலகும்.

நம்மைச் சுற்றி நேர்மறை அதிர்வலைகள் பரவும். ஆயுள் பலம் கூடும். தேர்வுக்கு செல்பவர்கள் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்துவிட்டுச் சென்றால் வெற்றி உறுதி. குறிப்பாக, எலும்புகள், கண் பார்வை தொடர்பான பாதிப்புகளுக்கு இந்த பாராயணம் நிவாரணம் தரும்.

ராமாயணயத்தின் நாயகனான ஸ்ரீராமபிரான், ராவணனுடன் போருக்குச் செல்லும் முன்பு ஆதித்ய ஹிருதயத்தை பாராயணம் செய்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இதனை ஸ்ரீராமனுக்கு உபதேசித்தவர் அகத்தியர் என்பது சிறப்பு.

முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணனைப் போலவே சூரிய பகவானுக்கும் சங்கு மற்றும் சக்கரம் ஆயுதமாக உள்ளது. அதனால் சூரியனை அனைவரும் நாராயணர் பெயருடன், ‘சூரிய நாராயணர்’ என்றே அழைப்பார்கள்.

விஞ்ஞான ரீதியாக சூரியன் மனநிலை மற்றும் வளர்சிதை மாற்றங்களை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஆகவேதான், அனைத்து உயிர்களின் இயக்கத்திற்கும் அடிப்படை சக்தியை தரவல்ல சூரியனை தினமும் அதிகாலையில் வணங்கி சூரிய நமஸ்காரம் செய்தன் மூலம் மனம் அமைதியுடன் உடல் ஆரோக்கியமும் பெறலாம்.

இயற்கையின் காவலரான சூரிய பகவானுக்கு தை திருநாளாம் பொங்கல் பண்டிகையில் முதல் மரியாதை தந்து அவரது ஸ்லோகத்தை பாராயணம் செய்து வழிபட்டு நாளும் நன்மைகள் பெறுவோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *