இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் சிமிட்டுவதற்கு என்ன காரணம் தெரியுமா..?
சிமிட்டுதல் என்பது கண்களுக்கு ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கக்கூடிய ஒரு முக்கியமான செயல்பாடு ஆகும். இந்த முக்கியமான செயல்பாட்டின் ஒரு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவென்றால் இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் தான் சிமிட்டும். இதற்கான காரணம் தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் உண்டு. இது சிமிட்டுதலின் தன்னிச்சையான செயல்பாடு காரணமாக ஏற்படுகிறது.
இரண்டு கண்களுக்கும் பொதுவான ஒரு நரம்பு கண்களில் இருந்து மூளைக்கு செய்தியை அனுப்பும் பொழுது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. கண் இமைகளுக்கு மேலும், அதற்கு இடையிலும் இருக்கக்கூடிய தசைகள் கண்களின் இந்த உடனடி மூடி திறக்கும் செயல்முறைக்கு உதவுகிறது. குறிப்பாக, கண்களில் ஏதேனும் தூசு படும்பொழுது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
இரண்டு கண்களுக்கும் பொதுவான அந்த நரம்பு இந்த சிமிட்டுதல் செயல்முறை இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் நடப்பதை உறுதி செய்வதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வெளிப்புற பொருட்கள் அல்லது கண்களை எரிச்சலூட்டக்கூடிய பொருட்கள் கண்களுக்குள் நுழைந்து கண்களை சேதப்படுத்துவதில் இருந்து பாதுகாக்கிறது. கம்ப்யூட்டரை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் நாம் கண்களை சிமிட்டுவதை மறந்து விடுகிறோம். இதனால் ஏராளமான பிரச்சனைகள் எழலாம். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொள்ளுதல்: 20-20-20 என்ற விதியை பின்பற்றுவதன் மூலமாக, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடிகளுக்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும்.
கண் சிமிட்ட வேண்டும் என்ற உணர்வு: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி கண் சிமிட்ட வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
கண் மருந்துகள்: கண்களில் உள்ள வறட்சியை குறைப்பதற்கு மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் நீங்கள் ஐ ட்ராப்ஸ் வாங்கி பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் லைடிங் மற்றும் ஸ்கிரீன் நிலையை சரியாக அமைத்தல்: கம்ப்யூட்டரில் லைட்டிங்கை மாற்றுவதன் மூலமாக கிளார் அடிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிளார் ஃபில்டர்களையும் வாங்கி பயன்படுத்தலாம்.
ஸ்கிரீன் செட்டிங்ஸ்: கம்ப்யூட்டரில் இருக்கக்கூடிய எழுத்துக்களை நீங்கள் படிக்கும் பொழுது கண்களில் அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்கு கம்ப்யூட்டரின் பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யவும்.
ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் கம்ப்யூட்டர் முன்பு செலவழிக்க கூடிய நேரத்தை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்களது தூக்கத்தை பாதிக்கலாம்.
கண் சிமிட்டுதல் குறையும் பொழுது அதனால் பக்கவாதம், காயம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அல்லது பிற பக்கவிளைவுகள் ஏற்படலாம். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நபர்களுக்கு குறைவான தசை இயக்கம் காரணமாக கண் சிமிட்டுதல் அரிதாகவே இருக்கும். எனவே கண் சிமிட்டுதலின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.