ஏத்தர் வர 6ம் தேதி என்னத்த அறிமுகம் செய்யபோகுதுனு உங்களுக்காவது தெரியுமா? டீசரை வெளியிட்டு ஹைப்-ஐ ஏத்திட்டாங்க
ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் ரிஸ்தா (Riztha) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது நிறுவனத்தின் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஆமாங்க, குடும்ப பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவே இதனை ஏத்தர் எனெர்ஜி வடிவமைத்து இருக்கின்றது.
வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியை இந்த வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது ஏத்தர். அன்றைய தினத்திலேயே ஏத்தர் நிறுவனம் அதன் கம்யூனிட்டி தினத்தையும் கொண்டாட இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் மற்றுமொரு தரமான சம்பவத்தைச் செய்ய தயாராகிக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனம் ஓர் புதிய தயாரிப்பு நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. புதிய தயாரிப்பு என்ற உடன் புதுமுக வாகனம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். நிறுவனம் அக்ஸசெரீஸ் என்றே குறிப்பிட்டு இருக்கின்றது. இதையும் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் பதிவையே அந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றது.
சே ஹாலோ (Say Halo) எனும் டீசர் வீடியோவையும் அது வெளியிட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பின் அறிமுகத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆகையால், இந்தியாவில் உள்ள மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பு எகிற தொடங்கி இருக்கின்றது.
எங்களின் யூகிப்பின்படி இது ஓர் ஸ்மார்ட் ஹெல்மெட்டாக இருக்கலாம் என எதிர்பார்க்ப்படுகின்றது. ஆனால், தங்கள் நிறுவனம் ஹெல்மெட்டைதான் அறிமுகம் செய்ய இருக்கின்றது என்கிற தகவலை வெளியிடவில்லை. வருகின்ற 6ஆம் தேதி அன்றே அது என்ன தயாரிப்பை இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது என்பது தெரிய வரும்.
ஒருவேளை ஹெல்மெட்டாக இருப்பின், அந்த தலைக் கவசத்தில் ப்ளூடூத் இணைப்பு, ஹெட்ஸ்-அப் திரை, நேவிகேஷன் போன்ற இன்னும் பல அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஏத்தர் ரிஸ்தாவின் வருகையை எதிர்நோக்கி இந்தியர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற இந்தசூழலிலேயே தன்னுடைய ஸ்மார்ட் அக்ஸசெரீஸ் பற்றிய தகவலையும் வெளியிட்டு இருக்கின்றது ஏத்தர் நிறுவனம்.
இந்தியாவில் குடும்ப பயன்பாட்டு வசதிக் கொண்ட டூ-வீலர்களுக்கு டிமாண்ட் அதிகம். இதற்கு சான்றாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய புதுமுக மின்சார வாகனமான ரிஸ்தாவை குடும்பங்களுக்கான வாகனமாக வடிவமைத்திருக்கின்றது ஏத்தர். இதன் அடிப்படையிலேயே பெரிய இருக்கையை ஏத்தர் வழங்கி இருக்கின்றது.
அந்த இருக்கை ஹோண்டா ஆக்டிவாவில் இருப்பதை விட பெரியதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர, பெரிய ஸ்டோரேஜையும் அது கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கின்றது. எனவே கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தாராளமாக இந்த வாகனத்தில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, வயசானவர்களாலும் இந்த வாகனத்தில் சுலபமாக ஏறி பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், ரேஞ்ஜ் விஷத்திலும் இந்தியர்களின் எதிர்பார்ப்பை இந்த வாகனம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் காணப்படும் பெரிய திரை, இணைப்பு வசதி போன்றவையும் ரிஸ்தாவில் எதிர்பார்க்கப்படுகின்றன.