உங்கள் பான் கார்டு செயலிழந்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா ?
மக்கள் அனைவரும் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும். அப்படி வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டு அவசியம் ஆகும். இந்த பான் கார்டுகள் செயலிழந்துவிட்டால், என்ன ஆகும் என பார்க்கலாம்.
FD மற்றும் சாதாரண சேமிப்பு கணக்கு தவிர வேறு எந்த கணக்கையும் தொடங்க முடியாது. மேலும், டெபாசிட்டரி அல்லது செக்யூரிட்டிகளிலும் டீமேட் கணக்குகளையும் ஆரம்பிக்க முடியாது.
மேலும் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டை வாங்க விரும்பினால், ரூ.50,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. 50000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், எங்கியுமே நிறுவனத்தின் பத்திரம் அல்லது கடன் பத்திரங்களை வாங்க முடியாது.
அதே போல ஆர்பிஐ பத்திரத்தை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க முடியாது.
ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது. கூட்டுறவு வங்கியிலும்கூட டெபாசிட் செய்ய முடியாது.
பல்வேறு இடங்களில், ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பில் கட்ட முடியாது
வெளிநாடு சென்றால் கூட 50 ஆயிரத்திற்கு மேல் பில் செலுத்த முடியாது.
எந்த வங்கியிலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விண்ணப்பிக்க முடியாது.
டிராப்ட் மற்றும் செக்குகளுக்கு வங்கியால் ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக செலுத்த முடியாது
எந்த வங்கியிலும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு ஆண்டில் முதலீடு செய்வது முடியாது.
ஆயுள் காப்பீட்டு பிரீமியம் வடிவில் கூட 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது.
பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ ரூ.1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது
உங்கள் பான் கார்டு ஆக்டிவ் ஆக உள்ளதா என்பதை அறிய https://www.incometax.gov.in/iec/foportal/ இல் உள்ள அதிகாரப்பூர்வ போர்ட்டலில் பயனர் உள்நுழைய வேண்டும். விரைவு இணைப்பு விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் பான் விவரங்களை சரிபார்க்கவும் என்ற ஹைப்பர்லிங்கைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, அவர்கள் PAN, முழுப்பெயர், பிறந்த தேதி மற்றும் நிலையை உள்ளிட வேண்டும். கடைசியாக, படத்தில் குறிப்பிட்டுள்ளபடி கேப்ட்சாவை உள்ளிட்டு, PAN இன் விவரங்களைச் சரிபார்க்க சமர்ப்பி என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
பான் கார்டை செயல்படுத்துவதற்கான படிகள்
அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ -க்கு செல்ல வேண்டும். ஆதார்-பான் இணைக்கும் கோரிக்கையுடன் தொடரவும். அடுத்து, விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆதார்-பான் இணைக்கும் கோரிக்கை சமர்ப்பிப்பிற்கு, CHALLAN NO./ITNS 280ஐக் கிளிக் செய்யவும். கட்டணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, முழுமையான முகவரியுடன் மதிப்பீட்டு ஆண்டை (AY) தேர்ந்தெடுத்து PAN ஐ உள்ளிடவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிப்பதைத் தொடருவதே கடைசிப் படியாகும். உங்கள் பான் கார்டை செயல்படுத்த ஒரு மாதம் ஆகும்.