இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் 17% பணத்தை எதில் கொண்டு போடுகிறார்கள் தெரியுமா?
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மற்றும் டெக் துறை வளர்ச்சிக்குப் பின்பு நாட்டின் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல அமைப்புகள் இந்திய பெரும் பணக்காரர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, அதில் பல ஆய்வுகளைச் செய்கிறார்கள்.
இப்படிச் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் தங்களது முதலீடு செய்யக்கூடிய அல்லது செலவு செய்யக்கூடிய பணத்தில் சுமார் 17 சதவீதத்தை ஆடம்பர பொருட்களில் முதலீடு செய்கின்றனர். ஆடம்பர பொருட்கள் எனில் விலையுர்ந்த கடிகாரங்கள், ஓவியங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றிற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று Knight Frank நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான க்னைட் ஃபிராங்க், “The Wealth Report 2024” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவின் மிக அதிகச் சொத்து மதிப்புடைய தனிநபர்கள் அதாவது Ultra-high Net Worth Individuals, முதலீடு செய்யக்கூடிய பணத்தில் 17 சதவீதத்தைச் சொகுசுப் பொருட்களில் முதலீடு செய்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு, க்னைட் ஃபிராங்க், “The Wealth Report 2024” என்ற அறிக்கையைத் தயாரிக்கத் தேர்வு செய்யப்பட்ட UHNWI என்பவர்கள் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சொத்து மதிப்புடைய தனிநபர்கள், இது கிட்டதட்ட ரூ.250 கோடிக்கும் அதிகமாகும். இந்தச் சொத்து மதிப்பு ரியல் எஸ்டேட், பங்குகள், முதலீடுகள், கார்கள், பத்திரங்கள் என அனைத்து வகையான சொத்துக்களின் மதிப்பும் சேர்ந்தது.
இந்த ஆய்வில், பெரும் பணக்காரர்கள் ஆடம்பர பொருட்களில் முதலீடு செய்வதற்கான முக்கியக் காரணமாக இருப்பது, காஸ்ட்லியான பொருட்களைச் சொந்தமாக வாங்குவதில் ஒரு ஆனந்தம் ஏற்படுவதை விரும்புவது தான் அதிகப்படியானோரின் கருத்து என Knight Frank தெரிவித்துள்ளது.
இந்திய UHNWIகளுக்கு மத்தியில், சொகுசு கடிகாரங்கள் மிகவும் விரும்பப்படும் முதலீட்டுப் பிரிவாக உள்ளது, இதனைத் தொடர்ந்து ஓவியங்கள் மற்றும் நகைகள் உள்ளன. பிரபலமான பிராண்டின் பழைய கார்கள் 4வது இடத்திலும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர பிராண்டுகளின் ஹேண்ட்பேக், மது, அரிதான விஸ்கி, ப்ர்னிச்சர், வண்ணமயமான வைரங்கள் மற்றும் நாணயங்கள் ஆகியவை உள்ளன. இருப்பினும், உலகளவில், சொகுசு கடிகாரங்கள் மற்றும் பழைய கார்களைச் சொந்தமாக்குவதற்கே பணக்காரர்கள் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.
இந்தியாவில் பல்வேறு வயது குழுக்களிடையே அரிய சேகரிப்புப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், இந்த collectibles தற்போது பெரும் டிரெண்டாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இத்தகை ஆடம்பர பொருட்களின் மீது தொடர்ந்து முதலீடுகளை எதிர்பார்க்கலாம்.