ஓடிடியில் வெளியாகும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ படம்… எப்போது தெரியுமா?
உறியடி விஜயகுமார் நடிப்பில் அப்பாஸ் ஏ.ரஹ்மத் எழுதி, இயக்கிய ஃபைட் கிளப் படத்தை ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இதில் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
வடசென்னை பின்புலத்தில் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபைட் கிளப்பை இயக்குநர் எடுத்திருந்தார். இதன் கதை, திரைக்கதையை எழுத ஒரு வருடமும், படமாக்க ஒரு வருடமும், போஸ்ட் புரொடக்ஷன் முடித்து வெளியாக ஒரு வருடமும் என மூன்று வருடங்கள் பிடித்ததாக இயக்குநர் கூறியிருந்தார்.
ஃபைட் கிளப்பைப் பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு படம் பிடித்துப்போக, தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் முதல் படமாக அதனை வெளியிட்டார். தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கி வெளியிட்டது.
ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.7 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் 27-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.