கௌதம் மேனன் தந்தை நடித்த ஒரே படம் எது தெரியுமா? அதும் அவர் இயக்கிய படம்..!
வளர்ந்து வரும் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புது முக இயக்குனர்கள் நடிகர்கள் என பலரும் தங்களது அசாத்திய திறமைகளால் சினிமா காதலர்களுக்கு தீனி போட்டு வருகின்றனர். அப்படி எவ்வளவு புதுமுக திறமைகள் வந்த போதிலும், காலம் கடந்தாலும் தங்களின் படைப்புகளின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் ஒரு சில இயக்குனர்கள்.
அந்த வரிசையில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன். 2001 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமாசென், விவேக் மற்றும் பலர் நடிப்பில் ‘மின்னலே’ திரைப்படம் வெளியானது.
தனது முதல் படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் கெளதம் மேனன். படத்தின் ஒவ்வொவொரு பாடலும் இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் ரிப்பீட் மோடில் பிளே ஆகிக் கொண்டிருக்கிறது.
அந்த அளவுக்கு கதை, திரைக்கதை, பாடல் என அனைத்திலும் சென்சுரி அடித்தார் இயக்குனர் கெளதம் மேனன்.
அதை தொடர்ந்து, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணமாயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என அடுத்தடுத்து இவரது படைப்பில் உருவான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாஸ் ஹிட் கொடுத்தது.
இவரது இயக்கத்தில் 20026 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் நடிப்பில் வெளியானது “வேட்டையாடு விளையாடு” திரைப்படம்.
கிரைம் திரில்லர் கான்செப்டில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து மாபெரும் வசூலை அள்ளிக்குவித்தது. சமீபத்தில் இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கோடிகளில் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
வேட்டையாடு விளையாடு படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் தனது தனத்தை வாசுதேவ மேனனை ஒரே ஒரு ஷாட்டில் நடிக்கவைத்துள்ளார் . அது எந்த ஷாட் தெரியுமா?
கவுதம் மேனனின் தந்தை ஒரு சில சினிமா படங்களை மட்டுமே பார்க்கக்கூடியவராம். அப்படி அவர் நடிகர் கமல் ஹாசனின் மிகப்பெரிய ரசிகர்.
அந்த ஷாட்டில் தனது தந்தையை நடிக்கவைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன். தனது தந்தைக்கு எதெரியாமால் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது அவரது தந்தையை அழைத்து நடிக்கவைத்துள்ளார். தந்தையின் அழியா நினைவாக இருக்க வேண்டும் என்றுஅவர் செய்த இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.