ஐஎம்டிபி ரேட்டிங்கில் டாப் 250 இல் இடம்பிடித்த தமிழ்ப் படங்கள் எவை தெரியுமா?

ஐஎம்டிபி (இன்டர்நேஷனல் மூவி டேட்டா பேஸ்) இணையதளம் உலகம் முழுவதும் தயாராகும் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள், பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புள்ளிவிவரக் களஞ்சியம். இந்த இணையதளத்தில் ஒரு படத்திற்கோ, இணையத்தொடருக்கோ ரசிகர்கள் ரேட்டிங் தரலாம், விமர்சனம் எழுதலாம். படங்களின் ரேட்டிங் ரசிகர்களின் மதிப்பெண்களைப் பொறுத்தது என்பதால், ஐஎம்டிபி தரவரிசையில் அதிக மதிப்பெண் பெறுவது ஒரு கௌரவமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருட இறுதியிலும் டாப் 250 படங்களின் திருத்திய பட்டியலை ஐஎம்டிபி வெளியிடும். தங்கள் தளத்தில் ஒரு படத்துக்குக் கிடைத்த ரேட்டிங்கை வைத்து டாப் 250 படங்களின் பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த டிசம்பர்வரை வெளியான படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற முதல் 250 படங்களின் பட்டியலை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் கமலின் நாயகன் தொடங்கி சூர்யாவின் ஜெய்பீம்வரை 62 தமிழ்ப் படங்கள் இடம்பிடித்துள்ளன. அந்தப் படங்களின் விவரம் வருமாறு…

நாயகன், ராக்கெட்ரி, அன்பே சிவம், பரியேறும் பெருமாள், ஜெய் பீம், சூரரைப் போற்று, 96, கைதி, அசுரன், விசாரணை, தேவர் மகன், தளபதி, சார்பட்டா பரம்பரை, தனி ஒருவன், வட சென்னை, அந்நியன், ராட்சசன், பேரன்பு, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா, விக்ரம், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், அருவி, முதல்வன், புதுப்பேட்டை, துருவங்கள் பதினாறு, ஜிகர்தண்டா, சூது கவ்வும், விருமாண்டி, காக்கா முட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, பாட்ஷா, பிதாமகன், அலைபாயுதே, ரோஜா, பம்பாய், இந்தியன், வாரணம் ஆயிரம், படையப்பா, விடுதலை பார்ட் 1, தடம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஆடுகளம், மாநகரம், தெய்வத் திருமகள், கார்கி, விண்ணைத்தாண்டி வருவாயா, கர்ணன், போர் தொழில், பீட்சா, லவ் டுடே, ஹேராம், துப்பாக்கி, கில்லி, காக்க காக்க, போக்கிரி, வேட்டையாடு விளையாடு, துள்ளாத மனமும் துள்ளும், கத்தி, ஆயிரத்தில் ஒருவன், பூவே உனக்காக ஆகிய படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவை அனைத்தும் விமர்சனரீதியாக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவை என்பது முக்கியமானது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *