இந்தியாவிலேயே ஐட்டம் டான்ஸுக்கு அதிக சம்பளம் வாங்கிய நடிகை யாரு தெரியுமா?.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
சென்னை: சில்க் ஸ்மிதா, மும்தாஜ், பாலிவுட்டில் சன்னி லியோன், மலைகா அரோரா, கத்ரீனா கைஃப், டோலிவுட்டில் தமன்னா முதல் பல முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளனர்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளுக்கு அதிகப்படியாக சம்பளமே 10 முதல் 12 கோடி வரையில் தான் உள்ளன. ஆனால், ஹீரோக்கள் 100, 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு ஒரு படம் முழுக்க ஹீரோயின் வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளத்தை ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியே ஒரு நடிகை வாங்கி இருக்கிறார் என்றால் அது ஆச்சர்யத்தின் உச்சம் தான்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஷாருக்கான் நடித்த உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தைய்யா தைய்யா பாடலுக்கு ரயில் மீது ஏறிக் கொண்டு நடனமாடியவர் மலைகா அரோரா. பாலிவுட்டின் முன்னணி ஐட்டம் டான்ஸர் என வர்ணிக்கப்படும் அவரே அந்த அளவுக்கு ஒரு பாடலுக்கு சம்பளம் வாங்க வில்லையாம். பாகுபலி படத்தில் குத்தாட்டம் போட்ட நோரா ஃபதேகி கூட வாங்காத சம்பளத்தை வாங்கியது ஒரு சென்னை பொண்ணு என்றால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும் அது வேறு யாருமில்லை நம்ம சமந்தா தான்.
2 கோடி வாங்கும் சன்னி லியோன்: இந்தியாவிலேயே குத்தாட்டம் போடுவதற்கு அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாக நடிகை சன்னி லியோன் உள்ளார். ஆபாச நடிகையாக இருந்த அவர் பாலிவுட்டுக்கு பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட வந்த பின்னர் தொடர்ந்து கிக்கேற்றும் படங்களிலும் ஷாருக்கானின் ராயீஸ் படத்தில் ஐட்டம் பாடலுக்கும் நடனமாடி இருந்தார். ஒரு படத்துக்கு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட அதிக பட்சம் சன்னி லியோன் வாங்கும் தொகை 2 கோடி ரூபாய் என்கின்றனர்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்: மலைகா அரோரா, நோரா ஃபதேகி உள்ளிட்ட நடிகைகள் 1.5 கோடி வரை ஐட்டம் பாடலுக்கு நடனமாட வாங்குவதாக கூறுகின்றனர். நடிகை தமன்னா கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கும் அவர் தரமான நடனத்தை ஆடிய நிலையில், அவர் ஒரு பாடலுக்கு அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வாங்குகிறார் என்றே கூறுகின்றனர். ஆனால், இவர்களை எல்லாம் ஒரே ஒரு பாட்டில் சமந்தா ஓவர்டேக் செய்து விட்டார் என்பது தான் மிகப்பெரிய ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
விவாகரத்துக்கு பிறகு விஸ்வரூபம்: நாக சைதன்யாவை விவாக்ரத்து செய்து பிரிந்த நிலையில் நடிகை சமந்தா அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வந்த புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட அழைக்கப்பட்டார். அந்த பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு அதிகபட்சம் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டது தான் இதுவரை ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர்கள் வாங்கிய அதிகப்படியான தொகையே என்கின்றனர். அந்த படத்தில் நடித்த ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவுக்கே 4 கோடி தான் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் அந்த பாடல் வட இந்தியாவிலும் புஷ்பா படத்தின் மார்க்கெட்டை அதிகரித்தது என்பது நிதர்சனமான உண்மை