இஞ்சியை யாரெல்லாம் சாப்பிட கூடாதுனு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க
இஞ்சி சுவை சரக்கு பொருட்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் A, C, B6, B12, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
இஞ்சியில் பல வகையான சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் இருக்கின்றன.
ஆனால் இந்த இஞ்சியை குறிப்பிட்ட சிலர் உணவில் எடுத்துக் கொள்ள கூடாது யாரெல்லாம் இஞ்சியை எடுத்து கொள்ள கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இஞ்சி
இஞ்சியில் செரிமான சக்தி அதிகமாக உள்ளதால் இந்த செரிமான சக்தி சத்துக்கள் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள கூடாது.
இதனால் வயிறு சுருங்கும். குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ரத்த சம்மந்த பிரச்சனை உள்ளவர்கள் அதாவது உயர் குருதி அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டும்.
சக்கரை நோயாளர்கள் இஞ்சியை எடுத்துக்கொள்ள கூடாது. ரத்த உறைதல் பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
உடலில் ஏதாவது பிரச்சனைக்காக சத்திர சிகிச்சை செய்ய இருப்பவர்கள் இந்த இஞ்சி சம்மந்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்த கூடியது.