மீன் எண்ணெய் மாத்திரை யாரெல்லாம் சாப்பிட வேண்டும் தெரியுமா? மருத்துவரின் விளக்கம்
நம்மில் சிலருக்கு இதய நோய் இருப்பின் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்வது அவசியமாகும். மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும்.
இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும். ஆனால் இதில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதை சிலர் சாப்பிடவும் கூடாது.
எனவே யாரெல்லாம் மீன்ணெண்ணை மாத்திரை சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன் எண்ணெய் மாத்திரை
இந்த மாத்திரைகள் சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளில் இருந்தே, தயாரிக்கப்படுகின்றன. மீன்ணெண்ணை மாத்திரையில் மாரடைப்பு வரக்கூடிய கொழுப்பை கரைக்கும் சக்தி உள்ளது.
மீன்ணெண்ணை மாத்திரையை ஆண்கள் எடுத்துக் கொண்டால் அவர்களின் ஆண்மை அதிகரித்து குழந்தை பேறு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்களில் மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாத்திரையை போட்டு வந்தால் இந்த நோய்களின் தொந்தரவில் இருந்து விடுபடலாம்.
குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் நோயான ரிக்கெட்ஸ் நோயை போக்குவதற்கு இந்த மீன் எண்ணெய் மாத்திரை சிறந்த பயன் தரும்.
ஆஸ்த்துமா பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஆஸ்த்துமா பிரச்சனை விரைவில் சுகம் வரும்.
மூளையின் செயல்பாட்டுத்திறனையும் இது அதிகரிக்க செய்கிறது. இதை சக்கரை நோயாளிகள் மற்றும் குறைவான ரத்த அழுத்தம் கொண்டவர்கள் எடுத்து கொள்ள கூடாது.
உடலில் எந்த வித நோயும் இல்லாதவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். அதிகமான மீன் எணணெய் மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது. குறைந்தது ஒன்றரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவது நல்லது.