இந்த க்யூட் சிறுமி யாருனு தெரியுதா? விஜய் பட நடிகைதான் இவங்க!
இந்த படத்தில் இருக்கும் க்யூட்டான குழந்தை யார்னு உங்களால கண்டுபிடிக்க முடியுதா?
இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் ரொம்ப பிஸியாக இருக்கும் நடிகைதான் இவங்க.
10 ஆண்டு காலமாக இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில்தான இவர் அறிமுகம் ஆனார்.
இன்றைக்கு பல படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேதான் நீங்கள் முதல் படத்தில் பார்த்த குழந்தை.
2012-இல் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில்தான் பூஜா அறிமுகம் ஆனார். அந்த படம் சுமாராக ஓடியதால் அடுத்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை.
தமிழில் பீஸ்ட் படத்தில் சூப்பர் ஹிட்டான அரபிக் குத்து பாடலில், பூஜா ஹெக்டே போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
பீஸ்ட் படத்தில் பூஜா – விஜய் இடையிலான காதல் காட்சிகள் குறைவாக இருக்கும். இன்னொரு படத்தில் இந்த ஜோடி இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கூறியிருந்தனர்.
இன்ஸ்டாகிராமில் பூஜாவை 2.6 கோடிப் பேர் பின் தொடர்கின்றனர்.
தனது நடிப்புக்காக 20க்கும் மேற்பட்ட விருதுகளை பூஜா ஹெக்டே அள்ளிக் குவித்துள்ளார்.