சிறுவனாக இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரியுதா? இசையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்..!
திரைத்துறை பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தாய், தந்தையுடன் இருக்கும் பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இந்த பிரபலம் தனது தனித்துவமான இசையால் பெரும் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருப்பவர்.
பிரபல இசையமைப்பாளரான இவர் தமிழில் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இறைவழிபாட்டையும், இசையையும் தனது இரு கண்களாக வைத்திருக்கும் இந்த பிரபல இசையமைப்பாளர் யாருனு கண்டுபிடிசீங்களா?
கும்கி , விஸ்வாசம், அண்ணாத்த, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கயல், ரோமியோ ஜூலியட், போன்ற பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தான் தாயுடன் இருக்கும் இந்த குட்டி குழந்தை.
சில படங்கள் இவரது இசைக்காகவே ஹிட் கொடுத்தது என்றே கூறலாம். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் டி. இமானின் குழந்தை புகைப்படம் இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.