விராட் கோலியின் கேப்டன்சியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட 4 பேர் யார் தெரியுமா?
எம்எஸ் தோனி ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விலகிய பிறகு விராட் கோலி 2017 முதல் 2021 வரை இந்திய ஒயிட்-பால் அணிக்கு கேப்டனாக இருந்தார். கோலி தலைமையில், இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 WC அரையிறுதி வரை சென்றது. விராட் கோலியின் தலைமையில் இந்திய ஒருநாள் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அவரது கேப்டன்சியில் ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை அணியில் இருந்து நீக்கினார். இந்த நான்கு பேரில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இடம் பெற்ற ஒரே வீரர் ஜடேஜா மட்டுமே தான். 2021 டிசம்பரில் கோலி ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். விராட் கோலியால் ஒருநாள் அணியில் இருந்து ஏன் இந்த வீரர்கள் நீக்கப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அஸ்வின் இந்திய ஒருநாள் அணியில் எப்போதும் விளையாடி வந்தார். அனைவரையும் அதிர்ச்சியூட்டும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டத்தில் அஸ்வினை அணியில் இருந்து நீக்கினார் கோலி. அதன் பிறகு அஷ்வினுக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் 50 ஓவர் உலக கோப்பை அணியில் இருந்தும் வெளியேறினார். அக்சர் படேல் காயம் அடைந்ததால் அஸ்வின் 2023 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார், ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார். இந்நிலையில், மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே.
ரவீந்திர ஜடேஜா
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு வீரர் ரவீந்திர ஜடேஜா. ஆல்ரவுண்டர் ஜடேஜா ஒரு நாள் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தார். 2017ல் இலங்கை தொடரில் இடம் பெறாத ஜடேஜா, அதன் பின்னர் அணியில் தனது இடத்தை இழந்தார். ஒரு வருடம் தொடர்ந்து அணியில் தனது இடத்திற்காக போராடினார். பிறகு 2018ல் தனது இடத்தை தக்கவைத்து கொண்ட ஜடேஜா, 2019 உலகக் கோப்பையில் விளையாடினார். தற்போது டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் முக்கியமான ஆல்ரவுண்டராக உள்ளார் ஜடேஜா.
அஜிங்க்யா ரஹானே
அஜிங்க்யா ரஹானே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயராக விளையாடி வந்தார். ஐசிசி நிகழ்வில் மிடில்-ஆர்டரில் சிறப்பாகா விளையாடி வந்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு ரஹானே இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார். பிறகு தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க தவறினார். இதனால் 2019 உலகக் கோப்பையிலும் இடம் பெறவில்லை. அந்த தொடர் முழுவதும் இந்திய அணி சரியான மிடில் ஆர்டர் பேஸ்ட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறியது.
ஷ்ரேயாஸ் ஐயர்
2019 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி முயற்சித்த மற்றொரு வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். 2017 டிசம்பரில் இந்திய அணிக்கு அறிமுகமானார் ஐயர். இவர் நீண்ட காலமாக அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடினார். மேலும் 2019 உலகக் கோப்பை அணியில் அவர் இடம் பெறவில்லை. 2023 உலகக் கோப்பையில் இந்தியாவின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். 11 போட்டிகளில் 530 ரன்கள் குவித்தார். ஆனாலும் தற்போது மீண்டும் தனது இடத்தை அணியில் இருந்து இழந்துள்ளார்.