நம் முன்னோர்கள் எதற்காக மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுக்க சொன்னார்கள் தெரியுமா ?
அகத்திக்கீரையை நம் முன்னோர்கள் மாட்டிற்கு விஷமுறிவுக்காகவே கொடுத்து வந்தார்கள்.
மாடுகள் மேயும் போது புல்களில் இருக்கும் சிறு சிறு பூச்சிகளையும், சில விஷத்தன்மை வாய்ந்த செடிகளையும் சேர்த்து உண்டுவிடும்.அந்த விஷமானது மாட்டின் கழுத்து பகுதியில் தங்கி விடுகிறது.சில நேரங்களில் மாடுகள் திடீர் என்று இறப்பதற்கு.மாட்டின் தொண்டை பகுதியில் தேங்கி இருக்கும் இந்த விஷம். காரணம் ஆகிவிடுகிறது.
மாடுகள் இப்படி விஷத்தன்மை வாய்ந்து சிறு பூச்சிகளையும் செடிகளையும் உண்டாலும் அதன் பாலில் விஷம் கலப்பதில்லை.
இது போன்ற விஷத்தை முறிக்கும் சக்தி அகத்திக்கீரைக்கு மட்டுமே உண்டு.அதனால் தான் நம் முன்னோர்கள் மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
பின் காலப்போக்கில் இறை வழிபாடுடன் இனைந்து விட்டது இவ்வாறு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் பழக்கம்.