சிலர் அடிக்கடி காதல் வயப்பட காரணம் என்ன தெரியுமா? இதுதான் காரணமே..!

காதல் என்பது மிகவும் அற்புதமான அதே சமயம் அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைக்காத ஒரு உணர்வாகும். சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே ஒருவர் மீது மட்டுமே இந்த காதல் உணர்வு ஏற்படும். இதுவே வேறு சிலரை எடுத்துக் கொண்டால் அவர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்கள் மீது காதல் வயப்படுவார்கள். சிலருக்கு காதல் என்பது ஒரே ஒரு முறை தான் வர வேண்டும் எனவும், சிலர் அப்படி எல்லாம் இல்லை காதல் என்பது யாருக்கு வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம் என்று கூறுவார்கள்.

இது இப்போது வரை விவாதத்திற்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால் சிலருக்கு ஒரே ஒருமுறை மட்டும் ஏற்படும் இந்த காதல் பலருக்கு பல்வேறு நபர்கள் மீது பல முறை ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

பன்முகத்தன்மை கொண்ட தொடர்புகள்:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அனுபவங்களை தினந்தோறும் பெற்று வருகிறார்கள். மேலும் தனிப்பட்ட ஆர்வம், அவரவர் நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட குண நலன்கள் ஆகியவை நபருக்கு நபர் மாறுபடும். மேலும் சிலர் மிக எளிதில் மற்றவர்களுடன் பழகும் தன்மையையும் சிலர் மிக அரிதாகவே மற்றவர்களுடன் பழகுபவர்களாகவும் இருக்கின்றனர். அதன் காரணமாக சிலருக்கு எத்தனை முறை காதல் வயபட்டாலும் அதில் போதுமான திருப்தி கிடைப்பதில்லை.

ஒரு சிலருக்கோ அவர்களது குண நலன்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப ஒரே ஒரு நபரிடம் இருந்து அவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைத்து விடுகிறது. இது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருந்தாலும் சிலர் ஏற்கனவே உறவில் இருக்கும்போது அவரைவிட சிறப்பான மற்றொரு வரை கண்டுவிட்டால் தற்போது இருக்கும் காதல் உறவை துண்டித்து விட்டு புதியவர்கள் மீது காதல் கொள்ள துவங்கி விடுகின்றனர்.

தனிப்பட்ட வளர்ச்சி:

மனிதர்கள் எப்போதுமே தொடர்ச்சியாக தங்களை மெருகேற்றி கொண்டு வருகிறார்கள். அவரவர் அனுபவத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியும் அமைகிறது. மற்றவர்கள் மீது காதல் வயப்பட இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியும், மன முதிர்ச்சியையும் செய்யும் பொறுத்து மற்றவர்கள் மீது ஏற்படும் காதலானது வேறுபடுகிறது.

மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகள்:

வாழ்க்கை எல்லாருக்கும் எப்போதுமே ஒரே மாதிரி இருப்பது கிடையாது. நாம் நினைத்தது போல் சிலவையும் நாம் நினைக்காதது பல விஷயங்களும் நடந்து நமது வாழ்வில் சூழ்நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கும். சிலர் புதிய இடங்களுக்கு குடி பெயர்தலும், புதிய அலுவலகங்களுக்கு மாறி செல்வதும், புதிய விதமான பயிற்சிகளை மேற்கொள்வதும் மிகவும் இயல்பான விஷயங்கள் ஆகும். அவர்களின் இந்த மாற்றங்களை பொறுத்து அவர்கள் சந்திக்கும் மனிதர்களின் அடிப்படையில் அவர்களுக்கு புதிய காதல் தோன்றுகிறது. இது பெரும்பாலும் அவர்களை எதிர்பாராத ஒன்றாகவே இருக்கிறது என்பது தான் சுவாரசியம்.

பொருத்தம்:

இரு நபர்களுக்கு இடையே மிகவும் ஆழமான உணர்வு ரீதியான புரிதல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இடையே ரொமான்ஸ் உண்மையாகவும், அழகாகவும் இருக்கும். அதனால்தான் பல்வேறு நபர்களும் தங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் மீது காதல் வயப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக திருப்திகரமாக அமைகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு பொருந்தும் வகையில் யாராவது கிடைக்கும் வரை அவர்களின் காதலுக்கான தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கடந்த கால உறவுகளிள் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுதல்:

ஒவ்வொருவரும் தனது கடந்த கால அனுபவங்களை ஒப்பிட்டு பார்த்து அதில் பெற்ற அனுபவங்களை வைத்து நிகழ்கால வாழ்வை செதுக்கி கொண்டு முன்னேறுவது மனிதர்களின் முக்கியமான ஒரு தன்மையாக பார்க்கப்படுகிறது இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக ஒவ்வொருவரும் தாங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை தற்போது நிகழ்காலத்தில் செய்யக்கூடாது என்பதில் அதிகம் செயல்படுவார்கள். அந்த வகையில் கடந்த கால காதல் வாழ்க்கையில் செய்த தவறுகளை ஒருவர் சரி செய்து கொண்டு புதிதாக மற்றவர் மீது காதல் கொண்டு அந்த தவறை இந்த முறை நிகழாமல் பார்த்துக் கொண்டு புதுவித அனுபவங்களை பெற முயற்சி செய்கிறார்கள்.

காலம்:

அனைத்திற்குமே ஒரு நேரம் உண்டு. குறிப்பாக வாழ்வில் சரியான மனிதர்களை சரியான நேரத்தில் சந்திப்பது என்பது அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடாத ஒரு வரப் பிரசாதம் ஆகும். சிலருக்கு காதல் வயப்படுவதற்கு சரியான நேரம் இருந்தாலும் அதற்கு ஏற்ற பார்ட்னர் கிடைப்பது அரிதாக இருக்கும். ஒரு சிலருக்கும் மனதிற்கு பிடித்த நபர் இருந்தாலும் அவர்களது சூழ்நிலை அதற்கு கை கொடுக்காது. இதன் காரணமாகவே பல்வேறு காதல் உறவுகள் முழுமையாக தொடங்குவதற்கு முன்பே முடிந்து விடுகின்றன. அது வேறொரு தளத்தில் பரிணமித்து வேறு ஒருவரிடம் காதல் வயப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

காதலை திறந்த மனதுடன் வரவேற்பது:

சில தனிப்பட்ட நபர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களுடன் எளிதில் பழகும் தன்மையும், காதலை அளவின்றி பொழியும் குணத்தையும்பெற்றிருப்பார்கள். அதுபோலவே அவர்கள் காதலை அணுகும் விதமும் அதனை அனுபவிக்கும் விதமும் ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக இருக்கும். மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாக தெரிவார்கள். இப்படிப்பட்ட நபர்கள் பெரும்பாலும் பல முறை காதல் பயப்பட வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்ட தனி நபர்கள் எந்த மத எதிர்பார்ப்பும் இன்றி திறந்த மனதுடன் காதலை பொழிவதால் இவர்கள் மீது மற்றவர்கள் அதிகம் காதல் கொள்ள வாய்புகள் உண்டு. மேலும் தங்களுடைய தேடலில் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் புதுவித அனுபவங்களை பெறுவார்கள்.

நினைவில் வைக்க வேண்டியவை:

இந்த விஷயத்தில் யாரும் எதையும் வரையறுத்துக் கூற இயலாது. ஒவ்வொரு உறவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாடத்தை சொல்லிக் கொடுக்கும். அனைத்தையும் தாண்டி ஒருவருக்கு ஏற்படும் காதல், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், மன மகிழ்ச்சிக்கும் வழி வகுப்பதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *