திருமண மோதிரத்தை ஏன் இடது கையில் அணியனுன்னு தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே நாகரீகம் என்னதான் வளர்ச்சியின் உச்சத்தை தொட்டாலும் இன்றும் திருமணம் என்று வந்துவிட்டால் பல்வேறு சமய சடங்குகள் பின்பற்றப்படுகின்றது என்பதே உண்மை.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட திருமணத்தின் போது செய்யப்படும் மத நம்பிக்கைகளை பின்பற்றுகின்றார்கள்.

காரணம் திருமணம் என்ன சொல்லியேயே ஏதோ ஒரு வசீகர தன்மை இருக்கின்றது. அதனால் தான் நாம் அனைவருமே அந்த வாழ்க்கையை விரும்புகின்றோம்.

திருமணம் என்பது அனைத்து மதங்களிலுமே ஒரு மகிழ்ச்சியான மற்றும் மங்கலகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

திருமண சடங்குகளை ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு முறைப்படி செய்து வருகிறார்கள். இந்து மதத்தை பொருத்தவரை கழுத்தில் தாலி கட்டுவது, காலில் மெட்டி அணிவது, கையில் மோதிரம் அணிவது இதுபோன்ற இன்னும் நிறைய சடங்குகள் பின்பற்றப்படுகின்றது.

ஆனால் பொதுவாகவே அனைத்து மதத்தினரும் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் இரண்டில் எதுவாக இருந்தாலும் மோதிரம் அணியும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது.

இப்படி திருமணத்தின் போதோ அல்லது நிச்சயத்தின் போதோ மணமகன் மற்றும் மணமகன் மோதிரம் மாற்றிக்கொள்ளும் போது மோதிரத்தை இடது கையின் மோதிர விரலில் தான் அணிவிப்பார்கள்.இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கினன்றீர்களா?

பொதுவாக திருமண மோதிரம் இடது கை மோதிர விரலில் அணியப்படுவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் மற்றும் மத நம்பிக்கை குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

இதுதான் காரணமா?
இவ்வாறு இடது கையின் மோதிர விரலில் திருமண மோதிரத்தை அணியும் ஆண், பெண் இருவருடைய பந்தமும் முடிவில்லாமல் தொடரும் என்பது மத நம்பிக்கையாக பின்பற்றப்படுகின்றது.

இந்த வழக்கம் எகிப்து நாகரத்திலிருந்து தோன்றியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மோதிரங்கள் முடிவில்லாத வளையங்கள் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கையாகும்.

திருமண பந்தம் முடிவில்லாமல் தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள்.

இடது கை விரலில் அணியும் வழக்கத்தையும் அவர்களே அறிமுகப்படுத்தினார்கள். மோதிரம் அணியும் விரல் காதல் விரல் (LOVE FINGER ) என்று அழைக்கும் வழக்கமும் எகிப்தில் இருந்து தோன்றியது.

இடது கையில் சுண்டு விரலுக்கு பக்கத்தில் உள்ள விரலை தான் மோதிர விரல் என்று சொல்வார்கள். அந்த விரல் இதயத்திற்கு நெருக்கமான விரல் என்று கூறப்படுகிறது.

மேலும் நிச்சயதார்த்த மோதிரத்தை அந்த விரலில் அணியும் போது தனது வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிவசமான ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு நம்பிக்கை.

அதுமட்டும் இல்லாமல் அந்த மோதிரத்தை அணிந்தவர் உங்களுடைய இதயத்திற்கு நெருக்கமானவர் என்பதை உணர்த்தும் என்று கூறுகிறார்கள்.

அறிவியலின் படி இடது கையின் மோதிர விரலின் நரம்புகள் நேரடியாக இதயத்துடன் தொடர்புப்படுகின்றது. இதில் மோதிரம் அணிவதால் இதயநோய், வயிற்றுப் பிரச்னை ஆகிய பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கின்றது.

மேலும் ஆண், பெண் இனவிருத்தி உறுப்புகளுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.இதுவே இந்த வழக்கம் பின்பற்றப்படுவதற்கான அறிவியல் காரணமாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *