ரயில் தண்டவாளத்தில் இந்த இடைவெளி ஏன் இருக்கு தெரியுமா? – அட இந்த காரணத்துக்குதானா!
நம்மில் பலருக்கு ரயிலில் பயணம் செய்வதை விட ரயில் தண்டவாளத்தில் நடப்பதற்கு பிடிக்கும்.
நீங்கள் ரயில் தண்டவாளத்தில் நடந்து இருக்கிறீர்களா? அப்படி நடந்து சென்றிருந்தால் ரயில் தண்டவாளத்திற்கு இடையில் ஏன் இடைவெளி இருக்கிறது? என யோசிச்சிருக்கீங்களா?.
அதாவது தண்டவாளத்திற்கு இடையில் ஒரு கோடு போன்ற இடைவெளி இருக்கும். அது ஏன் உள்ளது என கான காரணத்தை பார்க்கலாம் வாங்க.
பெரும்பாலும் தண்டவாளங்கள் அனைத்தும் இரும்பை உள்ளடக்கிய உலோக கலவையால் செய்யப்பட்டவை ஆகும். அதனால் அவை வெப்பத்தை கடத்தும் திறனை கொண்டுள்ளது.
கோடை காலங்களில் இரும்பு வெப்பமடைந்து விரிவடைகிறது. அப்படி விரிவடையும்போது, தண்டவாளத்தின் நீளம் அதிகரிக்கும். அந்த நேரத்தில் தண்டவாளத்தின் இடையே உள்ள இடைவெளி, இரும்பு விரிவடைவதால் ஏற்படும் கூடுதல் நீளத்திற்கு இடம் கொடுக்கும்.
அதுவே கால மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை நிகழ்வு குறைவதால் தண்டவாளம் இறுகத் தொடங்கும். இதன் காரணமாக நீளம் குறைந்து, மீண்டும் தண்டவாளத்தில் இடைவெளி ஏற்படும்.
எனவே குளிர் காலங்களில் நன்றாக இறுகி, நீளம் குறைந்து, பழைய நிலைக்கே தண்டவாளம் முழுமையாகத் திரும்பி விடும். இதனால் தான் தண்டவாளங்களில் இடைவெளி இருக்கிறது.
அதுவே தண்டவாளங்களில் இந்த இடைவெளி இல்லையென்றால் கோடையில் விரிவடைவதால் தண்டவாளங்கள் சிதைந்து விபத்துக்கு உள்ளாகும்.
அதாவது அதன் நீளம் அதிகரிக்கும்போது தண்டவாளம் வளைந்து விடும். இதனால் தண்டவாளம் சேதமடைந்து ரயில் விபத்துகள் ஏற்படும். இதற்காக தான் ரயில் தண்டவாளத்தில் இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது.