“காதலுக்கு கண்ணில்லை” என்று ஏன் சொல்லுகிறார்கள் தெரியுமா..? உண்மையான காரணம் இதுதான்..!
‘காதலுக்கு கண்ணில்லை’ என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் உண்மையான காதல் புற அழகை பார்க்காமல், உள்ளத்தை மட்டும் பார்த்து வருவதாகும் என்று ஒரு காரணம் இருந்தாலும், உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்று ஏன் சொல்லுகிறார்கள் என்பத்கை குறித்து இங்கு பார்க்கலாம்..
ஓர் ஆய்வில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மனித மூளையின் நடத்தை செயல்படுத்தும் அமைப்பு (பிஏஎஸ்) மற்றும் காதல் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கியுள்ளது. அதாவது காதலுக்கு ஏன் கண்ணில்லை என்கிறார்கள் என்று அந்த ஆய்வு நமக்கு சொல்கிறது.
நாம் காதல் உணர்வில் திளைக்கும் போது மூளையில் ஆக்ஸிடாசின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன் வெளியாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது, ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி (ANU), கான்பெர்ரா பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றுமொரு உண்மையை கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது நாம் ஒருவர் மீது காதல் கொள்வதற்கு எப்படி நம்முடைய மூளையின் ஒரு அங்கம் பொறுப்பாகும் என்பதை விளக்கியுள்ளனர்.
காதல் வயப்பட்ட 1,556 இளைஞர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தகவல்கள் Behavioural science இதழில் வெளியிட்டப்பட்டது. அதில் சில கருத்துக்கணிப்பு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் அவர்களின் துணையின் உணர்ச்சிகரமான எதிர்வினை, அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தை மற்றும் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர் மீது செலுத்தும் கவனம் ஆகியவை குறித்து கேட்கப்பட்டன.
அதாவது நாம் காதலிக்கும்போது, நம்முடைய மூளை வித்தியாசமாக செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. காதல் அன்பின் வழியாக நம்மை நடத்தி, அதையே நம் வாழ்வின் மையமாகவும் மாற்றுகிறது. ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் குரங்குகளிலிருந்து பிரிந்த பின்னர் காதல் பிறந்தது என ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
“நம் அன்புக்குரியவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க காரணம், ஆக்ஸிடாஸின், டோபமைனுடன் இணைவதே. இவை இரண்டும் காதலின் போது நமது மூளை சுரக்கும் ஹார்மோன்கள். காதல் நேர்மறையான உணர்வுகளுடன் தொடர்புடையது. நம் மூளையில் அதற்கான விளைவையே அது செயல்படுத்துகிறது.
மக்களே.. என்னதான் நாம் வெவ்வேறு காரணங்களுக்காக காதலில் விழுவதாக நினைத்தாலும் யாருடன் இருக்கும் போது நமக்கு ஆக்ஸிடாசினும் டோபமைனும் அதிகமாக சுரக்கிறதோ அவர்கள் மேல் தான் நாம் பித்து கொண்டு அலைகிறோம். அதனால் தான் காதலுக்கு கண்கள் இல்லை என்கிறார்களோ என்னவோ!!