ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட விஜய்… மறுத்தது ஏன் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில், விஜய் நடிக்க வாய்ப்பு கேட்டு மறுத்த தகவல் வைரலாகி வருகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் படையப்பா.
திரையுலக பட்டாளமே இணைந்து அசத்திய இப்படம் பலருக்கும் திருப்புமுனையை கொடுத்தது.
இன்றுவரை படையப்பா படம் பலருக்கும் பேவரைட் தான், நீலாம்பரி கதாபாத்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு விஜய்க்கு மறுக்கப்பட்டதாம், இது பற்றி அவரை பதிலளித்த பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், படையப்பா படத்தில் வாய்ப்பு கேட்டது தொடர்பான கேள்விக்கு விஜய் பதிலளிக்கையில், படையப்பா படத்தில் நடிக்க யாரும் என்னை கூப்பிடவில்லை, நானே தான் கேட்டேன், ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என தெரிவிக்கிறார்.
அப்படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார், ஆனால் விஜய் முன்னணி நாயகனாக மாறிவருவதை கருத்தில் கொண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், தயாரிப்பாளர் ரஜினிகாந்தும் மறுத்துவிட்டனராம்.