வெயில் காலம் தானேனு அடிக்கடி மோர் குடிக்கிறீங்களா.? இந்த பக்கவிளைவுகளை சந்திப்பீங்க..!

மோர், நம் சமையலறைகளில் பொதுவாக காணப்படும் பானங்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்த ருசியான பானத்தை சுவைக்காமல் ஒவ்வொருவரின் கோடைக்காலம் முழுமையடையாது.

சில பிரத்தியேக கோடை கால பானங்களும் தேவைப்படும். அந்த பட்டியலில் மோர், ஒரு தனிச்சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. எவ்வளவு கொடுத்தாலும் குடிக்கலாம் என்கிற அளவுக்கு பலருக்கும் பிரியமான மோரில் சொல்லியடங்காத அளவு நன்மைகள் உள்ளன.

இது வெயில் காலங்களில் நம்மை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், செரிமானத்திற்கு உதவுகிறது, நமது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது, பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது, வாய் தொடர்பான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது.

இப்படி பல வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மோர், சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது என்று கூறினால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை, ஆம்! தினமும் மோர் குடிப்பதால் சில சிக்கல்கள்ளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைப்பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

சிறிய அளவிலான மோரில் கூட நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு கப் (அதாவது 245 மில்லி) மோரில் 98 கலோரிகள், 8 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 22% கால்சியம், 16% சோடியம் மற்றும் 22% வைட்டமின் பி12 ஆகியவைகள் உள்ளன.

இதே மோர், சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் ‘சால்ட் கன்டென்ட்’ உடன் தொடர்புடைய பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குறைந்த கொழுப்புள்ள மோர், அதிக கொழுப்புள்ள வெர்ஷன்களை காட்டிலும் அதிகமான சோடியத்தை கொண்டிருக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன் விளைவாகவே – மோர், தனக்கே உரிய சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.

தினமும் மோர்குடித்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

சளி, காய்ச்சல் அல்லது மகரந்த ஒவ்வாமையின் (pollen allergy) போன்ற நிலைகளின் போது, இரவு நேரங்களில் மோர் குடிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

வெண்ணெயில் இருந்து க்ரீமை (Malai) பிரித்தெடுப்பதன் மூலம் மோர் தயாரிக்கப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே எனவே குழந்தைகளுக்கு மோர் கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனெனில் வெண்ணெயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன அவைகள் குழந்தைகளின் தொண்டையில் தொற்று மற்றும் சளியை ஏற்படுத்தலாம்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மோர் குடிப்பதை தவிர்க்கலாம். ஏனெனில் மோரில் சோடியம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *