குளிர்காலத்தில் மூக்கடைப்பினால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? நிவாரணம் இதோ

மூக்கடைப்பு அல்லது சைனஸ் தொற்றா? தலைபாரம், சளி, இருமல் போன்றவை குளிர்காலத்தில் நம்மை மோசமாக உணர வைக்க கூடிய ஒரு சில பிரச்னைகள். ஆஸ்துமா, பிரான்கைட்டிஸ், மூட்டு வலி, ஹைப்பர் டென்ஷன், டயாபடீஸ் போன்றவை குளிர் காலத்தில் மோசமாகலாம். இதில் சைனஸ் பிரச்னையும் அடங்கும். வெப்பநிலை குறைவதால் ரத்த நாளங்கள் சுருங்கி அதன் விளைவாக உடலில் உள்ள பிற உறுப்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது. உலர்ந்த வானிலை சைனஸ் பிரச்னைக்கு பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய காரணம்.

குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை அதிகம் ஆவதற்கான காரணங்கள் என்ன?

உலர்ந்த காற்று:

சைனஸ் பிரச்னை தூண்டப்படுவதற்கு இது முக்கியமான காரணமாக அமைகிறது. குளிர்ந்த வறண்ட காற்று சுவாச பாதையை வறண்டு போக செய்து எரிச்சல் அடைய செய்கிறது. இதனால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது.

வீட்டிற்குள் உள்ள ஒவ்வாமை பொருட்கள்:

குளிர்காலங்களில் நாம் பெரும்பாலும் வீட்டிற்குள் நேரத்தை செலவிடுகிறோம். வீட்டிற்குள் இருக்கக்கூடிய தூசு, பூச்சிகள், பூசணம் போன்றவை சைனஸ் அறிகுறிகளை தூண்டலாம்.

வைரஸ் தொற்றுகள்:

குளிர் காலங்களில் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்றுகள் காரணமாக சைனுசிட்டிஸ் ஏற்படலாம். இந்த தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு வழக்கமான முறையில் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவி சுகாதாரமாக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.

வெப்பநிலை மாற்றங்கள்:

வீட்டிற்குள் வெளியே மிகவும் குளிராகவும் வீட்டிற்குள் கதகதப்பாகவும் இருக்கக்கூடிய இந்த வெப்பநிலை மாற்றங்கள் காரணமாகவும் சுவாச பாதைகள் எரிச்சல் அடைந்து சைனஸ் பிரச்னை தூண்டப்படலாம். எனவே இது மாதிரியான திடீர் வெப்பநிலை மாற்றங்களை சமாளிக்க கூடிய வகையில் ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

குறைவான நோய் எதிர்ப்பு சக்தி:

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் அடிக்கடி சைனஸ் தொற்றுகள் ஏற்படலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துங்கள். காய்கறிகள், பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க கூடிய உணவுகளை சாப்பிடுவது, வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் போதுமான அளவு தூங்குவது போன்றவை இதில் அடங்கும்.

சைனஸ் பிரச்னைக்கான சிகிச்சை:

நீராவி இழுத்தல்:

நீராவியை உள்ளிழுத்தல் சுவாச பாதைகளுக்கு ஈரப்பதத்தை சேர்த்து நிவாரணம் அளிக்கும். நீங்கள் ஹியூமிடிஃபையர்களை பயன்படுத்தலாம், சுடுதண்ணீரில் குளிக்கலாம் அல்லது ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு சில துளிகள் யூகலிப்டஸ் அல்லது புதினா அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து ஒரு போர்வை கொண்டு முகத்தை மூடி ஆவியை உள்ளிழுக்கலாம்.

சுகாதாரம்:

உங்களையும் உங்கள் வீட்டை சுற்றி இருக்கக்கூடிய இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் போதுமான அளவு காற்றோட்டம் வருவதை உறுதி செய்யுங்கள்.

வெதுவெதுப்பான ஒத்தடங்கள்:

முகத்தில் வெதுவெதுப்பான ஒத்தடம் பயன்படுத்துவது சைனஸ் வலி மற்றும் அழுத்தத்தில் இருந்து நிவாரணம் தரும். ஒரு சுத்தமான காட்டன் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அதனை உங்கள் மூக்கு மற்றும் தாடை பகுதியில் ஒரு சில நிமிடங்களுக்கு வையுங்கள்.

சுவாச மருந்துகள்:

மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சைனஸ் பிரச்னைக்கு மருந்துகளை வாங்கி பயன்படுத்துங்கள்.

ஓய்வு எடுக்கவும்:

போதுமான அளவு ஓய்வு எடுங்கள், தூங்கும்பொழுது தலையை சற்று உயர்த்தி வையுங்கள். வழக்கத்தை விட ஒரு தலையணை கூடுதலாக வைத்து படுக்கவும்.

வெதுவெதுப்பான திரவங்கள்:

ஹெர்பல் டீ, சூப் வகைகள் அல்லது எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் போன்றவை சளியை வெளியேற்றி சைனஸிலிருந்து நிவாரணம் தரும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு சைனஸ் அறிகுறிகள் மோசமாகும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *