இயற்கை பட ராதிகாவை ஞாபகம் இருக்கா? முன்னாள் முதலமைச்சரை 2ஆம் திருமணம் செய்து கோடீஸ்வரர் ஆன கதை தெரியுமா?
சினிமா பிரபலங்களாக திகழ்ந்த பல நடிகைகள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படி திருமணத்திற்கு பிறகு செட்டிலான நடிகை குட்டி ராதா குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களின் லிஸ்ட்டில் எப்போதும் இயற்கை படம் இருக்கும். 2003ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளியான இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக குட்டி ராதிகா நடித்து பிரபலமடைந்தார். காதலை அழகாக காண்பித்த இந்த படம் பல நாட்கள் தியேட்டரில் ஓடியது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர், 9வது படித்து கொண்டிருந்த போதே நீல மேக சியாமா என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த குட்டி ராதிகா, தமிழில் வர்ணஜாலாம், மீசை மாதவன், உள்ளக்காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதையடுத்து இவர் 2000ஆம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென ரத்தன் குமார் உயிரிழந்துவிட்டார்.
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த இவர் திடீரென ஒரு குழந்தையுடன் மக்கள் மத்தியில் தலைகாட்டினார். அப்போது கன்னட முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கும் தனக்கும் 2006ஆம் ஆண்டு திருமணமாகிவிட்டதாகவும், தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் அறிவித்தார்.
இந்த சம்பவம் திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. தற்போது இவர் ரூ.124 கோடி சொத்துக்கு எஜமானியாக திகழ்ந்து வருகிறார்.