ஜேஜே படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரு சில படங்களுக்கு பிறகு திரையில் ஜொலிக்காமல் போய்விடுகின்றனர்.
அந்தவகையில் 2003ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ஜேஜே திரைப்படத்தின் மூலம் நடிகை பிரியங்கா கோத்தாரி பிரபலமானார்.
இந்த படத்தில் தமிழ் பேசும் மேற்கு வங்கத்து பெண்ணாக நடித்திருப்பார்.
ஆனால் அவர் நிஜத்திலேயே மேற்கு வங்கத்தில் பிறந்தவர். இந்தப் படம் வெளியானபோது இவர் தேவையானி சாயலில் உள்ளார் என பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
தற்போதும் கூட “தேடி தேடி தீர்ப்போமா”, “உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே” பாடல்களை கேட்டால் இவரது நினைவு எளிதாக வந்துவிடும்.
தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்தார். ஆனால் அவை யாரும் ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை.
ஜேஜே படத்தில் மாதவன் நூறு ரூபாய் நோட்டை தேடி அலைவது போல பிரியங்கா கோத்தாரியை தமிழ் திரையுலகில் தேட வேண்டியதாயிற்று.
இறுதியாக ஜீவாவின் கட்சேரி ஆரம்பம் படத்தில் “வாடா வாடா பையா” என பாடலுக்கு நடனமாடினார்.
இந்நிலையில், இவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.