ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறீர்களா? இந்த கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணா கேஷ்பேக் அதிகம் கிடைக்கும்!!
தினசரி செலவுகளை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான தீர்வு கேஷ்பேக் கிரெடிட் கார்டில் உள்ளது. எளிமையான இந்த கேஷ்பேக் கிரெடிட் கார்டை ஏதாவது பொருட்கள் வாங்கும் போது பயன்படுத்துவதால் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கிறது. அதாவது நீங்கள் செலவழித்த பணத்தில் குறிபிட்ட அளவு மறுபடியும் உங்களுக்கே கிடைக்கிறது. அதற்காக எல்லா கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளும் ஒன்றல்ல. சில கார்டுகள் நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட சதவிகித பணத்தை திரும்ப தருவார்கள். வேறு சில கார்டுகள் குறிப்பிட்ட பொருட்கள் வங்கினால் மட்டும்தான் கேஷ்பேக் கிடைக்கும் என கூறுவார்கள். இதுதான் வித்தியாசம்.
சரியான கேஷ்பேக் கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் வாங்கும் மளிகை பொருட்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு கேஷ்பேக் பெறலாம். ஆகையால் உங்களுக்கு உதவுவதற்காக இந்தியாவின் சிறந்த கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளில் பட்டியலை இங்கு தருகிறோம். உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டின் வருடாந்திர சேர்க்கை கட்டணம் ரூ.999 ஆகும். கார்டை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் ரூ.999 தொகையை செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ கேஷ்பேக் கார்டில் கிடைக்கும் சலுகைகள்:
ஆன்லைன் மூலமாக வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 5 சதவிகித கேஷ்பேக் கிடைக்கும். ஆஃப்லைன் மூலமாக இந்த கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால் ஒரு சதவிகித கேஷ்பேக் கிடைக்கும்.
ஆக்சிஸ் ஏஸ் கேஷ்பேக் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டின் வருடாந்திர சேர்க்கை கட்டணம் ரூ.499 ஆகும். கார்டை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் ரூ.499 செலுத்த வேண்டும்.
ஆக்சிஸ் ஏஸ் கேஷ்பேக் கார்டில் கிடைக்கும் சலுகைகள்:
யூடிலிட்டி பில் கட்டணம் மற்றும் கூகுள் பே வழியாக ரீசார்ஜ் செய்தால் 5 சதவிகித கேஷ்பேக் கிடைக்கும். ஸ்விகி, சொமோட்டோ, ஓலா மூலமாக இந்த கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினாலோ அல்லது பயணம் செய்தாலோ 4 சதவிகித கேஷ்பேக் கிடைக்கும்.
ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கேஷ்பேக் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டின் வருடாந்திர சேர்க்கை கட்டணம் ரூ.500 ஆகும். கார்டை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் ரூ.500 செலுத்த வேண்டும்.
ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கேஷ்பேக் கார்டின் சலுகைகள்:
ஃபிளிப்கர்டில் பொருட்கள் வாங்குவதற்கு 5 சதவிகித அன்லிமிடெட் கேஷ்பேக்கும் ஸ்விகி, பிவிஆர் போன்ற பார்ட்னர் மெர்ச்சண்டுகளிடம் சேவை பெற்றால் 4 சதவிகித கேஷ்பேக்கும் கிடைக்கும்.
அமேஸான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டிற்கு சேர்க்கை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டனம் எதுவும் கிடையாது.
அமேஸான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சலுகைகள்:
அமேஸான் தளத்தில் பொருட்கள் வாங்கினால் 5 சதவிகிதம் வரை கேஷ்பேக்கும் மற்ற அனைத்து ஆஃப்லைன் சேவைகளுக்கு ஒரு சதவிகித கேஷ்பேக்கும் கிடைக்கும்.
ஹெடிஃப்சி மில்லினியா கிரெடிட் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டின் வருடாந்திர சேர்க்கை கட்டணம் ரூ.1000 ஆகும். கார்டை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் ரூ.1000 செலுத்த வேண்டும்.
ஹெடிஃப்சி மில்லினியா கிரெடிட் கார்டு சலுகைகள்:
பிரபலமான ஆன்லைன் பிராண்டுகளில் பொருட்கள் வாங்கினால் 5 சதவிகித கேஷ்பேக் கிடைக்கும். மற்ற இடங்களில் பொருட்கள் வாங்கினால் 1 சதவிகித கேஷ்பேக் கிடைக்கும்.
ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டின் வருடாந்திர சேர்க்கை கட்டணம் ரூ.500 ஆகும். கார்டை புதுப்பிக்க வேண்டுமென்றாலும்ரூ.500 செலுத்த வேண்டும்.
ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு சலுகைகள்:
ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் பணப் பரிவர்த்தனை செய்தால் 25 சதவிகிதம் வரை கேஷ்பேக் கிடைக்கும்.
ஸ்டாண்டர்டு சாட்டர்டு ஸ்மார்ட் கிரெடிட் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டின் வருடாந்திர சேர்க்கை கட்டணம் ரூ.499 ஆகும். கார்டை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் ரூ.499 செலுத்த வேண்டும்.
ஸ்டாண்டர்டு சாட்டர்டு ஸ்மார்ட் கிரெடிட் கார்டு சலுகைகள்:
இந்த கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் வாங்கினால் இரண்டு மடங்கு கேஷ்பேக்கும், மாதத்திற்கு 0.99 சதவிகிதம் என குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு இஎம்ஐ கிடைக்கும்.
ஸ்விகி ஹெடிஃப்சி வங்கி கிரெடிட் கார்டு:
வருடாந்திர கட்டணம்:
இந்த கிரெடிட் கார்டின் வருடாந்திர சேர்க்கை கட்டணம் ரூ.499 ஆகும். கார்டை புதுப்பிக்க வேண்டுமென்றாலும் இந்த தொகையை செலுத்த வேண்டும்.
ஸ்விகி ஹெடிஃப்சி வங்கி கிரெடிட் கார்டு சலுகைகள்:
இந்த கார்டு பயன்படுத்தி ஸ்விகியில் உணவு ஆர்டர் மற்றும் இன்ஸ்டாமார்ட் டைன் அவுட் மற்றும் Genie-யில் பொருட்கள் வாங்கினால் 10 சதவிகித கேஷ்பேக் கிடைக்கும். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு 5 சதவிகித கேஷ்பேக் கிடைக்கும்.