சாப்பிட்டதற்கு பின்பு குளிக்கிறீர்களா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

நமது முன்னோர்கள் நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அதை எல்லாம் நாம் பின்பற்றி நடப்பது குறைவு.

அவர்கள் எதற்காக அப்படியான விஷயத்தை கூறுகிறார்கள் என எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? அந்த வகையில் அவர்கள் கூறிய ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு பலனை தரும்.

உணவு உட்கொண்ட பின் குளிக்க கூடாது என கூறுவதை கேட்டிருப்போம். எனவே தான் இன்று உணவு உண்டபின் குளிப்பது நல்லதா? இல்லை கெட்டதா? என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

உணவு உண்ட பின் குளித்தல்
எமது சருமம் நாம் குளிக்கும் போது பல அழுக்குகளை வெளியேற்றும். குளிக்கும் போது நமது உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது.

இந்த நேரத்தில் உடலில் உள்ள செல்கள் ஆற்றல் பெறுகின்றன. இதனல் தான் நாம் குளித்ததும் எமக்கு பசி உணர்வு ஏற்படுகின்றது.

சாப்பிட்டதும் குளிக்க கூடாததிற்கு காரணம் நாம் குளிக்கம் போது உடல் குளிர்ச்சி அடைகின்றன. அதனால் நொதியங்கள் சுரக்காமல் போய்விடும்.

இதனால் உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படாது. இதனால் மலச்சிக்கல், உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளும் வரக்கூடும்.

அதனால்தான், சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது என்கிறார்கள். குளித்து விட்டு சாப்பிடும் போது இந்த பிரசச்சனைகள் எதுவும் வராது.

மற்றும் காலையில் குளிப்பது சிறந்தாக இருந்தாலும் இரவில் குளித்தால் அது இன்னும் பயன் தரும். தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது, சருமத்துக்கு மிகவும் நல்லது.

அழுக்கு, வியர்வை போன்ற எதுவுமே சருமத்தில் படியாது. ஆழ்ந்த தூக்கத்தை தரும். எனவே இரண்டு வேளைகளிலும் குளிப்பது நல்லது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *