குப்புற படுத்து தூங்குறீங்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய 3 போஸ் இங்கே
சமீபத்தில், பைலேட்ஸ் பயிற்சியாளர் நம்ரதா புரோஹித் நாம் எந்த நிலையிலும் தவிர்க்க வேண்டிய மூன்று தோரணை தவறுகளைப் பகிர்ந்துள்ளார்.
அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில், நமது நல்வாழ்வின் மிக அடிப்படையான அம்சங்களில் ஒன்றான தோரணையை (posture) நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம். நாம் உட்காரும், நிற்கும் மற்றும் நகரும் விதம் நமது ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பலர் அதை அறியாமலேயே பொதுவான தோரணை தவறுகளை (posture mistakes) செய்கிறோம்.
சமீபத்தில், பைலேட்ஸ் பயிற்சியாளர் நம்ரதா புரோஹித், நாம் எந்த நிலையிலும் தவிர்க்க வேண்டிய மூன்று தோரணை தவறுகளைப் பகிர்ந்துள்ளார்.
அவை ஒருவரின் தோரணைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உடலில் சீரற்ற வலிகளை ஏற்படுத்தும்.
அட்வான்ஸ்டு ஃபிட்னெஸ் டிரெயினர் உத்சவ் அகர்வால் கூறுகையில், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் போது இடுப்பு எலும்புகளில் சீரற்ற அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இந்த சமநிலையின்மை இடுப்பை சாய்க்கவோ அல்லது சுழற்றவோ செய்யலாம், இது முதுகெலும்பின் சீரமைப்பை பாதிக்கிறது.
கூடுதலாக, இந்த நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அசௌகரியம் அல்லது வலியை ஏற்படுத்தும், குறிப்பாக கீழ் முதுகு, இடுப்பு ஆகியவற்றில். இது சியாட்டிகா போன்ற பிரச்சினைகளுக்கும் பங்களிக்கலாம் அல்லது தற்போதுள்ள நிலைமைகளை மோசமாக்கலாம்.
குப்புற படுப்பது
நீங்கள் குப்புற படுக்கும் போது, சுவாசிக்க உங்கள் தலையை ஒரு பக்கமாக வைத்திருப்பீர்கள். இது கழுத்தின் நீண்ட சுழற்சியை விளைவிக்கும், இது சிரமம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
இது கீழ் முதுகு மிக அதிகமாக வளைவதற்கு காரணமாக இருக்கலாம், இதனால் இடுப்பு முதுகெலும்பு மற்றும் துணை தசைகள் மீது அழுத்தத்தை உருவாக்குகிறது. இது தவிர, இந்த நிலை இயற்கையான சுவாச முறைகளை கட்டுப்படுத்தலாம் மற்றும் மார்பு மற்றும் நுரையீரல் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம், இது சுவாச செயல்பாட்டை பாதிக்கும், என்று அகர்வால் கூறினார்.
கழுத்தை முறுக்குதல்
எப்போதாவது கழுத்தை முறுக்குவது, சொடக்கு எடுப்பது தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், உங்கள் கழுத்தை வலுக்கட்டாயமாக முறுக்குவது அல்லது திருப்பவது காயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அகர்வால் விளக்கினார்.
சரியான நுட்பத்தை உறுதிப்படுத்தவும், செர்விகல் ஸ்பைனில் உள்ள நுட்பமான கட்டமைப்புகளை சேதப்படுத்தும் அபாயத்தைத் தவிர்க்கவும் கழுத்து சரிசெய்வதற்கு தொழில்முறை வழிகாட்டுதல் பரிந்துரைக்கப்படுகிறது.
முன்பே இருக்கும் நிலைமைகள், காயங்கள் அல்லது பிற உடல்நலக் கவலைகள் போன்ற தனிப்பட்ட காரணிகள் இந்த நடவடிக்கைகளின் தாக்கத்தை பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இந்தப் பழக்கங்கள் தொடர்பான குறிப்பிட்ட சிக்கல்கள் அல்லது அசௌகரியங்கள் யாருக்காவது இருந்தால், அவர்கள் தனிப்பட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு ஒரு சுகாதார நிபுணர் அல்லது தகுதி வாய்ந்த உடற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு நிபுணரை அணுக வேண்டும்.