வறண்ட சருமத்தை அழகுபடுத்தணுமா?அப்போ இந்த ஆயுள்வேத மூலிகைகள் ட்ரை பண்ணுங்க
சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் இயற்கையாகவே நிறைய உள்ளன. சரும வறட்சி என்பது எல்லா வயதினருக்கும் வரக்கூடிய பிரச்சனையாகும்.
இந்த சருமத்தை ஈரப்பதனாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒரு விஷயமாகும்.
அந்த வகையில் எந்த காலநிலையாக இருந்தாலும் சருமத்ததை வறட்சியில் இருந்து விடுவிக்கும் சில ஆயுள்வேத மூலிகைகளை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஆயுள்வேத மூலிகைகள்
1. எல்லோருக்கும் தெரிந்திருக்க கூடிய சாமந்திப்பபூவில் இயற்கையாகவே சருமத்தை அழகுபடுத்தகூடிய குணங்கள் உள்ளன.
இந்த பூவின் இதழ்களை எடுத்து அதை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து சருமத்தில் பூசி வர வேண்டும்.
பின்னர் இதை வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.
2.சருமத்தில் அழற்சி மற்றும் எதிர்ப்பு பண்புகள் உள்ளவர்கள் சீமை சாமந்திப்பூவை பயன்படுத்தலாம்.இந்த பூவை தண்ணீரில் அவித்து அந்த தண்ணீரை வடிகட்டி குளிக்கும் போது தண்ணீரில் ஊற்றி குளிக்க வேண்டும்.
இது சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு மிருதுவாகவும் லைவத்திருக்கும்.
3.பார்லியை மஞ்சளுடன் கலந்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் அப்பிளை செய்தால் சருமம் வறட்சியில் இருந்து விடுபட்டு பொலிவோடு காணப்படும்.
மற்றும் சந்தனத்தை ரோஜாப்பூப்பன்னீருடன் கலந்து சருமத்தில் பூசினால் வறட்சி நீங்கும்.