உடல் பருமன் சட்டுனு குறையணுமா… ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!

ளிர்காலத்தில், பொதுவாக உடல் பருமனை குறைப்பது சிறிது சவாலானதாக இருக்கும். இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அதிகமாகச் சாப்பிடுவதும், உடல் உழைப்பு இல்லாமல் செய்வதும் தான்.

குளிர்காலத்தில், மக்கள் குளிருக்கு இதமாக, டீ-பக்கோடா, ஹல்வா மற்றும் லட்டுகளை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த சீசனில் உடற்பயிற்சி செய்ய யாருக்கும் மனமிருப்பதில்லை. நாள் முழுவதும் படுக்கையில் உட்கார்ந்து அல்லது படுத்திருந்தால், உடல் எடை அதிகரிக்கிறது. இருப்பினும், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், நீங்கள் எளிதாக எடையைக் குறைக்கலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வழக்கமாக ஆக்கிக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

கிரீன் டீ குடிக்கவும்

குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க, பலர் டீ அதிகம் குடிப்பார்கள். ஆனால் இதில் உள்ள பால் மற்றும் சர்க்கரையின் காரணமாக உடல் எடை வேகமாக அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், பால் சேர்த்த டீக்கு பதிலாக கிரீன் டீயை (Green Tea) உட்கொள்ளுங்கள். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீ உட்கொள்வது தொப்பையை குறைக்க உதவும்

புரதம் நிறைந்த உணவை உண்ணுங்கள்

குளிர்காலத்தில், நம் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் அது உங்கள் எடையை வேகமாக அதிகரிக்கலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, உடல் எடையும் குறையும். இதற்கு சோயாபீன்ஸ், பீன்ஸ், முட்டை, கோழிக்கறி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும்

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இதனால் உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க முடியும். கூடுதலாக, வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. குளிர்காலத்தில், உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது பின் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இதனால் உணவு செரிமானம் ஆவதோடு, உடல் எடையும் குறையும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

குளிர்காலத்தில், பெரும்பாலான மக்கள் காலை நடைபயிற்சி அல்லது ஜிம்மிற்கு செல்ல சோம்பலாக உணர்கிறார்கள். ஆனால் உடல் செயல்பாடுகள் எதுவும் செய்யாததால் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க, குளிர்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம். இதனால் உடல் எடை வேகமாக குறையும். அதுமட்டுமின்றி, சக்தியும் உடலில் தங்கியிருக்கும்.

மஞ்சள் பால் குடிக்கவும்குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, இது தெர்மோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, உடல் உள்ளே இருந்து சூடாக இருக்கும். தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடிக்கவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *