நீங்க எப்பவும் இளமையா இருக்கணுமா? அப்போ கண்டிப்பா இதை பண்ணுங்க

பெண்கள் அழகாக இருப்பதற்காக பல விஷயங்களை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள்.

அழகாக இருப்பதென்றால் அழகுசாதனப்பொருட்களுக்கு எவ்வளவு வேண்டுமானாவலும் பணம் செலவு செய்வார்கள்.

இப்படி வாங்கும் பொருட்களால் பாதிப்பு உண்டாக்கக்கூடிய வகையில் நாம் அதை பயன்படுத்தக் கூடாது.

அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தும் போது மென்மையாகவும் இளமையாகவும் இருக்க சில முக்கியமான வழிகளை இந்த பதிவில் பார்கலாம்.

1.உங்கள் முகத்திற்கு நீங்கள் சோப் பயன்படுத்தினால் அதை நேரடியாக முகத்தில் தேய்க்க கூடாது. கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து சோப்பை தேய்த்த பின்னர் தான் முகத்தில் சோப் போட வேண்டும்.

நேரடியாக தேய்க்கும் போது சோப்பில் உள்ள இரசாயனங்கள் நமது முகத்தில் உள்ள எண்ணை சுரப்பியை இல்லாமல் செய்து விடும். இதனால் முகம் பொலிவிழந்து காணப்படும்.

சிலர் முகத்திற்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவீர்கள். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது அழுக்குகள் மேக்கப் போன்றவை முற்றாக இல்லாமல் போய் விடும்.

2.நீங்கள் முகத்திற்கு மேக்கப் போடும் போது முதலில் முகத்தை குளிர் நீரினால் கழுவ வேண்டும்.

மேக்கப் போடும் போது டோனர் பயன்படுத்துவது நல்லது மற்றும் மாய்ச்சரைசர் தடவி மூன்று நிமிடங்கள் கழித்த பின்னர் மேக் அப் போட்டால் மேக் அப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

3.உங்களது இளமையை காட்டி கொடுப்பது உங்கள் தலைமுடி தான். கூந்தலை நீங்கள் சிறந்த முறையில் பராமரித்தால் உங்களது பொலிவு கூடுதலாக காணப்படும்.

தலைக்கு நீங்கள் ஷாம்பு பயன்படுத்திய பின்னர் கன்டிஷனர் பயன்படுத்துகிறீர்கள். இவ்வாறு பயன்படுத்தும் போது கூந்தலின் நுனியில் மட்டும் பயன்படுத்தினால் தலையுடன் முடி ஒட்டாமல் பளபளப்பாக இருக்கும்.

ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும்.

4.இளைமையாக இருக்க முகத்தை மட்டும் அழகாக வைத்திருக்காமல் உங்கள் கைகள் மற்றும் கால்களையும் பராமரிக்க வேண்டும்.

அந்த வகையில் கை கால்களுக்கு சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம் இதனால் சூரிய ஒளி மற்றும் மாசுக்களில் இருந்து எம்மை பாதுகாக்கிறது.

தினமும் உங்கள் சருமத்திற்கு மாய்ச்சரைசர் பயன்படுத்தினால் அது உங்கள் சருமத்தில் வரும் சுருக்கத்தை தடுக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *